இரும்பன் – திரை விமர்சனம்
எம்ஜிஆரின் பேரனும் சுதா விஜயனின் மகனுமான ஜூனியர் எம்ஜிஆர் நடித்துள்ள படம் இரும்பன். குறவர் சமூகத்தை சேர்ந்த இளைஞராக நடித்து அசத்தியுள்ளார் ஜூனியர் எம்ஜிஆர். அஜானுபாகுவான தோற்றமும் எம்ஜிஆரை போன்ற அழகும் கொண்ட புதிய கதாநாயகன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார். இவர் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவது உறுதி. எம்ஜிஆரை பச்சைக் குத்திக்கொண்டு ஆஃபிஸ் என்ற கதாபாத்திரத்தில் மிக யதார்த்தமாக நடித்துள்ளார் ஜூனியர் எம்ஜிஆர். ஜெயின் சமூக இளம்துறவி மஹிமாவாக வருகிறார் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா.