இந்திய, பிரிட்டன் பிரதமர்கள் சந்திப்பு – உடனடியாக வெளியான ஹேப்பி நியூஸ்…!
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களில் பிரிட்டன் அரசு இந்தியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ஆண்டுதோறும் 3,000 இந்தியர்களுக்கு பிரிட்டன் அரசு கிரீன் விசா வழங்கவுள்ளது. . இந்தோனேசியாவில் உள்ள பழங்கால இந்திய கலாச்சார அடையாளங்களை கொண்ட பாலி தீவில், சக்திவாய்ந்த உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஜி-20 மாநாடு நடைபெற்றது.