ஆயிரம் பொற்காசுகள் – சினிமா விமர்சனம்
ரவி முருகையா இயக்கத்தில் விதார்த் மற்றும் சரவணன் நடித்துள்ள திரைப்படம் ஆயிரம் பொற்காசுகள். சரவணன் எந்த வேலைக்கும் செல்லாமல் கிராமத்தில் ஜாலி பேர்வழியாக உலா வருகிறார். அவரது வீட்டுக்கு உறவினரான விதார்த் வருகிறார். இந்நிலையில், மத்திய அரசு நிதியுதவி மூலம் கழிப்பறை கட்ட, சரவணன் வீட்டின் பின்புறம் தோண்டும்போது, சோழர் கால ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கிறது. இந்த தங்கப் புதையலை சரவணனும் விதார்த்தும் பங்கிட்டுக் கொள்ள நினைக்கும்போது, ஊரில் பலருக்கும் புதையல் கிடைத்த ரகசியம் தெரிய வருகிறது.