ராமானுஜரின் சமத்துவத்திற்கான சிலை: பிரதமர் மோடி திறந்துவைத்தார்
ஹைதராபாத் அருகே ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இச்சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர் என கூறினார். இவ்விழாவில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது : உலகம் முழுவதும் உள்ள ராமானுஜரின் சீடர்களுக்கு எனது வணக்கங்கள் . ராமானுஜர் சிலை திறப்பு