டிடி ரிடர்ன்ஸ் – திரை விமர்சனம்
திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக கலகலப்பான கேரக்டரில் அசத்தியுள்ளார் சந்தானம். அவரது காதலியின் சகோதரி, திருமண நாளில் ஓடிப்போவதால் செலவு செய்த பணத்தை மணமகன் குடும்பத்தினர் திருப்பி கேட்கிறார்கள். இந்த நேரத்தில் தனது காரில் யாரோ கொள்ளையர்கள் வைத்த பணத்தை கொடுத்து பிரச்சனையை அப்போதைக்கு சமாளிக்கிறார் சந்தானம். ஆனால், அதன் பிறகு அதுவே பூதாகரமாக உருவெடுக்க, ஒருகட்டத்தில் பணத்தை மீட்க பேய் பங்களாவுக்குள் செல்கிறார் சந்தானம். பணத்தை மீட்டாரா, காதலியுடன் கை கோர்த்தாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.