“அயோத்தி” – திரை விமர்சனம்
“அயோத்தி” திரைப்படம் சசிகுமாரின் திரையுலகப் பயணத்தில் ஒரு மைல்கல். அயோத்தி நகரில் இருந்து தென்னாட்டு புண்ணிய பூமி ராமேஸ்வரம் வருகிறது ஒரு இந்து குடும்பம். முரட்டுத்தனமான குடும்பத் தலைவரின் குணத்தால் ராமேஸ்வரம் செல்லும் வழியில் அவர்கள் செல்லும் கார் விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் அவரது மனைவி இறந்துவிட, போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் உடலை சொந்த ஊர் எடுத்துச் செல்ல விரும்புகிறார் குடும்பத் தலைவர். அவருக்கு கார் டிரைவரின் நண்பரான கதாநாயகன் சசிகுமார் எப்படியெல்லாம் உதவுகிறார் என்பதும், ஒரு முரட்டுத்தனமான