ஷாட் பூட் த்ரீ – சினிமா விமர்சனம்
அமெரிக்க வாழ் தமிழரான அருண் வைத்தியநாதன் இயக்கி தயாரித்துள்ள படம் ஷாட் பூட் த்ரீ. வெங்கட் பிரபு, சிநேகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். உயர் நடுத்தர குடும்பமான சாமிநாதன், ஷியாமளா தம்பதி அபார்ட்மென்ட்டில் வசிக்கிறார்கள். அவர்களது மகன் கைலாஷ் ஆசையாக ஒரு நாய் வளர்த்து வருகிறான். ஒருநாள் திடீரென நாய் காணாமல் போக, தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்லப்பிராணியை தேடுகிறான் சிறுவன் கைலாஷ். ஆனால், நாயை கொல்ல மாநகராட்சி ஊழியர்கள் திட்டமிடுகின்றனர். நாய் காப்பாற்றப்பட்டதா?