உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20
ஓட்டு வீடுகளிலும் கூடு கட்டி நம்முடன் நெருங்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் இன்று நம்மை விட்டும் இந்த பூமியை விட்டும் வேகமாக விடைபெற்று வருகின்றன. இவை வீட்டுக் குருவி, அடைக்கலக் குருவி, ஊர்க்குருவி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. சிட்டுக்குருவிகள் மனிதர்கள் வாழும் பகுதிகளிலேயே வசிக்கும் தன்மை கொண்டவை. சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண், பெண் இரண்டுமே முட்டைகளை பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பறக்கத்