“மார்கழி திங்கள்” – சினிமா விமர்சனம்

Posted by - October 27, 2023

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்துள்ள கவித்துவமான திரைப்படம் “மார்கழி திங்கள்”. “என் இனிய தமிழ் மக்களே, என்னைப் போலவே எனது மகனையும் இயக்குநராக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்ற கம்பீரக் குரலில் பாரதிராஜாவின் டிரேட்மார்க் அறிமுக வரிகளுடன் படம் தொடங்குகிறது. கதை, திரைக்கதை, வசனத்துடன் படத்தையும் தயாரித்துள்ளார் சுசீந்திரன். இயக்குநர் பொறுப்பை மனோஜ் பாரதிராஜாவிடம் கொடுத்திருக்கிறார். அவரது நம்பிக்கையை வீணாக்காமல் முதல் படத்திலேயே இயக்குநராக சிக்ஸர் அடித்திருக்கிறார் ராஜா வீட்டு கன்றுக்குட்டி…! திண்டுக்கல் அருகே ஒரு

“அயோத்தி” – திரை விமர்சனம்

Posted by - March 3, 2023

“அயோத்தி” திரைப்படம் சசிகுமாரின் திரையுலகப் பயணத்தில் ஒரு மைல்கல். அயோத்தி நகரில் இருந்து தென்னாட்டு புண்ணிய பூமி ராமேஸ்வரம் வருகிறது ஒரு இந்து குடும்பம். முரட்டுத்தனமான குடும்பத் தலைவரின் குணத்தால் ராமேஸ்வரம் செல்லும் வழியில் அவர்கள் செல்லும் கார் விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் அவரது மனைவி இறந்துவிட, போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் உடலை சொந்த ஊர் எடுத்துச் செல்ல விரும்புகிறார் குடும்பத் தலைவர். அவருக்கு கார் டிரைவரின் நண்பரான கதாநாயகன் சசிகுமார் எப்படியெல்லாம் உதவுகிறார் என்பதும், ஒரு முரட்டுத்தனமான

ராங்கி – திரைப்பட விமர்சனம்

Posted by - December 31, 2022

லைகா புரொடெக்சன்ஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ராங்கி. இப்படத்தில் த்ரிஷா ஒரு பத்திரிகையாளராக சூப்பராக நடித்துள்ளார் என்று தாராளமாக பாராட்டலாம். 40 வயதிலும் இளமை மாறாத த்ரிஷா, ஆன்லைன் பத்திரிகையாளரான தையல்நாயகி கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களின் இதயத்தை தைக்கிறார். அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தெனாவட்டான பாடிலாங்வேஜில் படத்தில் நிஜ ராங்கியாகவே வலம் வருகிறார். போலி ஃபேஸ்புக் கணக்கால் உருவாகும் சர்ச்சையை த்ரிஷா தீர்த்து வைக்க, அதன் தொடர்பு சர்வதேச தீவிரவாதம் அளவுக்குச்

“பவுடர்” டிரெய்லர் வெளியீட்டு விழா

Posted by - October 2, 2022

தமிழ் திரையுலகின் முன்னணி சினிமா செய்தித் தொடர்பாளரான நிகில் முருகன் முதல்முறையாக நடிகராக களமிறங்கியுள்ள திரைப்படம் “பவுடர்”. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் நிகில் முருகன் பேசியதாவது: எனது திரையுலக வெற்றிக்கு பக்கபலமாக உள்ள எனது தாய், தந்தை, மனைவி ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். சினிமா துறையில் வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி. பல ஆண்டுகளாக திரையுலகிலேயே பயணித்தாலும் நடிப்பது இதுவே முதல்முறை.

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.