நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு அநீதி…!
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, ஆன்மீகம், சுற்றுலாவில் முக்கிய மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. தென் மாவட்டங்களில் அடிதடி அரசியல் முதல் அராஜக ரவுடியிசம் வரை கொடிகட்டி பறக்கும் என்பதால், குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்ற பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அடிதடி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிப்பதும், அவர்களுக்கு தண்டனை பெற்று தருவதும் என்பது இப்பகுதிகளில் பெரும் சவாலானதாக இருக்கும். இதனால், தூத்துக்குடி தென் பாகம், சிப்காட் போன்ற காவல்