டீன்ஸ் – சினிமா விமர்சனம்
பள்ளி மாணவர்கள் 12 பேர் ஒன்றுசேர்ந்து பேய் இருப்பதாக கூறப்படும் ஒரு ஊருக்கு, ஆர்வம் மேலிட கும்பலாக புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு செல்லும் வழியில் மேலும் ஒரு சிறுவனையும் அழைத்துக் கொண்டு 13 பேராக செல்கின்றனர். ஒரு போராட்டத்தால் போக்குவரத்து முடங்கிவிட, காட்டு வழியே பயணத்தை தொடர்கின்றனர். அப்போது ஒவ்வொருவராக காணாமல் போக, திகிலுடன் மற்ற சிறுவர்கள் அவர்களை தேடுகின்றனர். காணாமல் போனவர்களுக்கு என்ன ஆனது, மாணவர்கள் ஊர் திரும்பினார்களா என்பது தான் படத்தின் மீதிக்கதை. படத்தின்