நகைகளை மீட்ட காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு
சென்னை அரும்பாக்கம் ஃபெட் பேங்க் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அனைத்து தங்க நகைகளையும் மீட்ட கூடுதல் ஆணையர் (வடக்கு) அன்பு தலைமையிலான காவல் குழுவினரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார். கடந்த 13-ம் தேதி, இந்த வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களின் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான 31.7 கிலோ எடை கொண்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சந்தோஷ், பாலாஜி, முருகன் உள்ளிட்ட 7 குற்றவாளிகளை