“பவுடர்” டிரெய்லர் வெளியீட்டு விழா
தமிழ் திரையுலகின் முன்னணி சினிமா செய்தித் தொடர்பாளரான நிகில் முருகன் முதல்முறையாக நடிகராக களமிறங்கியுள்ள திரைப்படம் “பவுடர்”. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் நிகில் முருகன் பேசியதாவது: எனது திரையுலக வெற்றிக்கு பக்கபலமாக உள்ள எனது தாய், தந்தை, மனைவி ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். சினிமா துறையில் வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி. பல ஆண்டுகளாக திரையுலகிலேயே பயணித்தாலும் நடிப்பது இதுவே முதல்முறை.