“டக்கர்” – திரை விமர்சனம்
நடிகர் சித்தார்த், திவ்யான்ஷா நடிப்பில் வெளிவந்துள்ள படம் “டக்கர்”. பணக்காரராக ஆசைப்படும் மிடில் கிளாஸ் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த் வருகிறார். பல வேலைகளை விட்டு விட்டு கடைசியில் ஒரு ரவுடியிடம் கார் டிரைவராக வேலை செய்கிறார் சித்தார்த். இதனிடையே ஒரு பணக்காரப் பெண் கடத்தல் கும்பலில் இருந்து தப்பி எதிர்பாராத விதமாக சித்தார்த்தை சந்திக்கிறார். அவர்களிடையே காதல் மலர்கிறது. கடத்தல் கும்பலிடம் இருந்து கதாநாயகியை நமது ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.