இன்பினிட்டி – திரை விமர்சனம்
நகரில் ஒரு இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, படத்தின் தலைப்புக்கு ஏற்ப முடிவற்ற தன்மையாக தொடர்ந்து சில விஐபிகளும் கொல்லப்படுகின்றனர். இந்த வழக்குகளை விசாரிக்க வரும் சிபிஐ அதிகாரியாக இயக்குநர் நட்ராஜ் நடித்துள்ளார். எப்போதும் மாறுபட்ட படங்களில், கேரக்டர்களில் நடித்து பட்டையைக் கிளப்பும் நட்ராஜ் இந்த படத்திலும் தனது தனித்தன்மையை நிலைநாட்டுகிறார். குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் நட்ராஜ் தடுமாறுகிறார். அதேநேரத்தில் மருத்துவர் வித்யா பிரதீப் சிகிச்சை அளிக்கும் குழந்தைகள் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். இதையடுத்து