கோட் – சினிமா விமர்சனம்
அரசியல் கட்சி தொடங்கிய பின்பு விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள முதல் படம் GOAT (Greatest Of All Time). தீவிரவாதத் தடுப்பு படையின் ரகசிய உளவுத்துறை அதிகாரியாக வருகிறார் விஜய். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதக் குழுவினரை அவர்கள் இருக்கும் நாட்டிற்கே சென்று போட்டுத் தள்ளுகிறார். அப்படி ஒரு முயற்சியின் போது, தனது 5 வயது மகனை இழக்கிறார். இதனால் மனைவி சிநேகா அவரை விட்டு பிரிந்து செல்கிறார். ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு, மாஸ்கோவில் தன்னைப் போன்ற