கேப்டன் விஜயகாந்த் காலமானார்
நடிகர், அரசியல்வாதி, கல்வியாளர் என்ற வரிசையில் நல்ல மனிதராக மக்களால் கொண்டாடப்பட்ட கேப்டன் விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71. மதுரை அருகில் உள்ள ராமானுஜபுரம் என்னும் கிராமத்தில் பிறந்த விஜயகாந்த் சினிமா மீது தீராக்காதல் கொண்டவர். ஆரம்பத்தில் தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் சூபர்வைசராக பணியாற்றினார். 1990-ல் பிரேமலதாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது