மனிதனை காதலிக்கும் சிட்டுக்குருவிகள்
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். இந்த சின்னஞ்சிறு பறவையினத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக ஐ.நா. அறிவித்தது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை விவசாய நாடான இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே குறைந்து வருகிறது. சிட்டுக்குருவிகள் வீடுகளில் கூடு கட்டினால் அதிர்ஷ்டம் வரும் என்பது இன்னும் கிராமத்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது. வயல்வெளி, வனப்பகுதிகளில் வாழ்வதை விட மனிதர்களுடன் நெருங்கி பழக விரும்பும் பறவையாக சிட்டுக்குருவி உள்ளது.