“பானி பூரி” – திரை விமர்சனம்
ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், RJ, சின்னத்திரை தொகுப்பாளர், நடிகர் என பன்முகத்திறன் கொண்ட பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் வெப் சீரிஸ் “பானி பூரி”. வெப் சீரிஸ் ஹீரோ லிங்காவின் பெயரான தாண்டாயுதபாணியில் இருந்து பானியையும், ஹீரோயின் சாம்பிகாவின் பெயரான பூர்ணிமாவின் பெயரில் இருந்து பூரியையும் எடுத்து “பானி பூரி” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இத்தொடருக்கான திரையிடல் மற்றும் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கதாநாயகன் லிங்கா பேசுகையில்,