“யாத்திசை” – திரை விமர்சனம்
மன்னர் கால படத்தை மினிமம் பட்ஜெட்டில் எடுத்து அசத்தியுள்ளது யாத்திசை படக்குழு. கதை ஏழாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. வெல்ல முடியாத சோழர்களை போரில் வீழ்த்தி மொத்த தென்திசையையும் கைப்பற்றுகிறது ரணதீரன் பாண்டியன் தலைமையிலான பாண்டியப் பேரரசு. தோல்வியால் சோழர் படை காட்டுக்குள் பதுங்கி வாழ்கிறார்கள். பாலை நிலத்தை சேர்ந்த எயினர்களின் மன்னரான கொதி, சோழர்களின் துணையுடன் ரணதீரனுக்கு எதிராக களமிறங்க திட்டமிடுகிறான். அதற்குள் பெரும்படையுடன் கோட்டையை நெருங்குகிறது ரணதீரனின் போர்ப்படை. யார் வென்றார்கள், அதற்கான முயற்சிகள் என்ன