600 படங்களை எட்டிய கலையுலகின் முதன்மை தூதர்

197 0

சினிமா உலகில் PRO எனப்படும் மக்கள் தொடர்பு அலுவலர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் நிகில் முருகன்.

பத்திரிகையாளர்கள் 24 மணி நேரமும் எளிதாக தொடர்பு கொள்ளக்கூடிய எளிமை, கலையுலகின் மீதான பேரன்பு, தொழில் நேர்த்தி ஆகியவற்றுக்காக நிகில் பெரிதும் போற்றப்படுகிறார். நிகில் பிரஸ் மீட் என்றாலே செய்தியாளர் சந்திப்பா அல்லது திருவிழா கூட்டமா என்று பட்டிமன்றம் நடத்தும் வகையில், மிகப் பிரம்மாண்டமாக இருக்கும்.

நியூஸ்பேப்பர், வார, மாத இதழ்கள் தொடங்கி, டி.வி, இணையதளம், யூடியூப் சேனல், சோசியல் மீடியா வரை அனைவரையும் அழகுற அரவணைத்து சினிமா செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் திறம்பட பணியாற்றுபவர் என்பது அனைவரும் அறிந்தது.

மைசூர் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறையில் டிப்ளோமா படித்துள்ள இவர், சினிமா மீதான காதலால் கோலிவுட்டில் செய்தித் தொடர்பாளராக தனது பணியைத் தொடங்கினார். 1997-ம் ஆண்டு நடிகர் அமிதாப்பச்சனின் ABCL நிறுவனம் தயாரித்த “உல்லாசம்” திரைப்படத்தின் மூலம் மக்கள் தொடர்பு அலுவலராக தனது கலைப் பயணத்தை தொடங்கினார்.

பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது, செய்தியாளர் சந்திப்பு, உபசரிப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிரஸ் ரிலீஸ் தயாரித்தல், நிகழ்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான ஏற்பாடுகள், நடிகர்-நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து செயல்படுதல் என பல்வேறு கட்டப் பணிகளை உள்ளடக்கியது திரையுலகின் PRO பணி. இதில், கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் நிகில் முருகன்.

உழைப்பால் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ள நிகில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன் ஆகிய இருவருக்கும் செய்தித் தொடர்பாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கே. பாலசந்தர், மணிரத்னம், ஷங்கர், பாலா உள்ளிட்ட ஜாம்பவான்களுடனும் பணிபுரிந்துள்ளார்.

தமிழில் “பவுடர்” என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடித்துள்ளார் நிகில். ஆரம்பத்தில் பத்திரிகையாளராக பணியாற்றிய இவர், பிரபல தினமணி நாளிதழின் முதல் ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிகில் முருகன், தற்போது நடிகர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் “லீடர்” திரைப்படத்தின் மக்கள் செய்தித் தொடர்பாளராக பணியாற்றுகிறார். இது அவரது 600-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உழைப்பின் சிகரமாக திகழும் நிகிலின் கலையுலக சேவை பொன்விழா, வைரவிழா காண, நிருபர் டிவி மற்றும் நிருபர் டைம்ஸ் பத்திரிகை சார்பில் அன்பு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

– நிருபர் நாராயணன்

 

 

Related Post

விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

Posted by - November 19, 2025 0
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 24…

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’

Posted by - July 16, 2025 0
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி…

அகத்தியா – சினிமா விமர்சனம்

Posted by - March 2, 2025 0
பிரபல பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள அகத்தியா படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே.…

“அந்தகன்” படத்தின் சிறப்பு டிரெய்லர் வெளியீடு

Posted by - August 8, 2024 0
நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள அந்தகன் திரைப்படத்தின் சிறப்பு டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் இயக்குநர் தியாகராஜன், சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா…

ஞாபகங்கள் தாலாட்டும் ஆட்டோகிராப் ரீ ரிலீஸ்

Posted by - November 7, 2025 0
2004-ம் ஆண்டு வெளியான சேரனின் ஆட்டோகிராப் திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் தீபாவளி போன்று கொண்டாடப்பட்டது. `ஞாபகம் வருதே’ என்ற அருமையான பாடல், சேரன் – சினேகா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.