சென்னையின் புகழ்பெற்ற எத்திராஜ் மகளிர் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற விழாவில், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான லெஜெண்ட் சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவுக்கு வந்த அவரை கல்லூரி மாணவிகள் சூழ்ந்துகொண்டு ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் ஃசெல்பி எடுத்தனர்.
இதையடுத்து லெஜெண்ட் சரவணன் விழாவைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கல்லூரி மாணவிகளிடையே உரையாற்றிய லெஜெண்ட் சரவணன், மாணவிகள் எப்போதும் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டும், அதையே அடித்தளமாக கொண்டு தங்களது கனவுகளை நனவாக்கி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
