பிளாஸ்ட் – சினிமா விமர்சனம்

30 0

ர்ஜுன் – அபிராமி ஜோடி பல வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக நடித்துள்ள திரைப்படம்.

கராத்தே மாஸ்டர் அர்ஜுன், மனைவி அபிராமி, மகள் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் குடும்பத்திற்கும் மலை கிராமத்தில் கனிம வளத்தை கொள்ளையடித்து பல ஆயிரம் கோடி சம்பாதிக்க திட்டம் தீட்டும் கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ரவுடி கும்பலிடம் இருந்து அர்ஜூன் குடும்பம் தப்பியதா, கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்தினார்களா என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

அரசியல்வாதிக்கு ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுப்பதற்கான ரகசிய அடையாளமான 100 ரூபாய் நோட்டு அர்ஜூன் கையில் சிக்குகிறது. அதை மீட்க வரும் கனிமவளக் கும்பலை அர்ஜூன் குடும்பம் சரமாரியாக தாக்கி பிளாஸ்ட் செய்கிறது. அதன் பிறகு படம் ஜெட் வேகத்தில் நகரத் தொடங்குகிறது.

அர்ஜுன் வழக்கம்போல் ஆக்சன் காட்சிகளிலும் சென்டிமென்ட் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 63 வயதிலும் சண்டை காட்சிகளில் மாஸ் காட்டி ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்திருக்கிறார்.

கதாநாயகி அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். ப்ரீத்தி முகுந்தன் வில்லன்களை பந்தாடும் காட்சிகள் அருமை. வில்லன் ஜான் கொக்கேன் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும் அதற்கேற்ப நகரும் அருண் ராதாகிருஷ்ணனின் கேமரா ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பிளஸ் பாயின்ட் என்றே கூறலாம்.

புதுமையான கதைக்களத்தில் அதிரடி ஆக்சன் கலந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுபாஷ் கே ராஜ்.

மொத்தத்தில், கோடை விடுமுறைக்கு குட்டீஸ்களுடன் தியேட்டருக்கு சென்று ஜாலியாக பார்த்துவிட்டு வரலாம்.

– நிருபர் நாராயணன்

Related Post

டெஸ்ட் – சினிமா விமர்சனம்

Posted by - April 5, 2025 0
ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சஷிகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தண்ணீரில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் தனது திட்டத்தை வெற்றி…

சான்றிதழ் – சினிமா விமர்சனம்

Posted by - August 6, 2023 0
கருவறை என்ற கிராமம் பெயருக்கு ஏற்றார் போல் புனிதமான கிராமமாக திகழ்கிறது. இந்த கிராமத்து மக்கள் ஒற்றுமை, ஒழுக்கம் என நீதி பிறழாமல் வாழ்கின்றனர். இதனை கெளரவிக்கும்…

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் நிகில் முருகன்

Posted by - August 26, 2025 0
கோலிவுட்டில் PRO எனப்படும் மக்கள் தொடர்பு அலுவலர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் நிகில் முருகன். நிகில் பிரஸ் மீட் என்றாலே செய்தியாளர் சந்திப்பா அல்லது திருவிழா கூட்டமா…

ஜூன் 25-ல் வெளியாகிறது “அந்தரன்”

Posted by - June 7, 2026 0
அந்தரன் திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா…

“சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்” இசை வெளியீட்டு விழா

Posted by - July 20, 2025 0
நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும்…

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.