திருவேற்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்

188 0

சென்னை திருவேற்காடு யாதவ நல சங்கம் சார்பில், சிவன் கோயில் அருகே 4-ம் ஆண்டாக உறியடி திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. இதில், கிருஷ்ணர் வேடமிட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இதையடுத்து ராதா, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணரின் சப்பர வீதியுலா நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவையொட்டி வண்ண மின்விளக்குகளால் உருவாக்கப்பட்ட பசுவுடன் கூடிய ஸ்ரீகிருஷ்ணரின் உருவம் பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் இருந்தது.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தால் சிவன் கோயில் எதிரே உள்ள பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த விழாவில் யாதவ சமூக மக்கள் மற்றும் ஊர் மக்கள் குடும்பத்தினருடன் திரளாக கலந்துகொண்டனர்.

சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை திருவேற்காடு நகராட்சி தலைவர் என்.இ.கே. மூர்த்தியின் வழிகாட்டுதலில், திருவேற்காடு யாதவ நல சங்க நிர்வாகிகளான தலைவர் எஸ்.லட்சுமணன், பொதுச்செயலாளர் இ.பாண்டியன், பொருளாளர் எஸ்.கே.ரவி, கெளரவத் தலைவர்கள் இ.கன்னியப்பன், கே.கருணாகர பாண்டி, என்.ஸ்ரீதர், வி.முருகன், துணைத் தலைவர்கள் ஜி.ராமலிங்கம், எஸ்.கோவிந்தன், என்.சோமு, டி.மஞ்சுநாதன், வி.சேகர், சட்ட ஆலோசகர் கே.மணிகண்டன், செயலாளர்கள் எஸ்.ஹரிசங்கர், கே.பிச்சாண்டி, கே.பன்னீர்செல்வம், எஸ்.விஜயசாரதி, எஸ்.சுப்பிரமணி, இளைஞர் அணி துணைத் தலைவர்கள் இ.மூர்த்தி, கே.செல்வக்குமார், இளைஞர் அணி செயலாளர்கள் பி.சந்தோஷ்கிருஷ்ணன், வி.கார்த்திகேயன், கே.விஜயகுமார், டி.கேசவன், எஸ்.பார்த்திபன், சி.லட்சுமி நாராயணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

– நிருபர் நாராயணன்

Related Post

உதவி ஆய்வாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

Posted by - December 2, 2024 0
சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு. சி.சுந்தரராஜன் அவர்கள், கடந்த நவம்பர் 30-ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். காவல்துறைப்…
tirupati, darshan, temple, online ticket, darshan ticket, devotees

திருப்பதி கோயிலில் இனி நேரடி இலவச தரிசன டிக்கெட்…

Posted by - February 5, 2022 0
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 15-ம் தேதி முதல் நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டம்…

வருணன் – சினிமா விமர்சனம்

Posted by - March 15, 2025 0
ஜெயவேல் முருகன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரில்லா இணைந்து நடித்துள்ள படம் ‘வருணன்’. ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும்…

அன்பகம் கலையுடன் 47 ஆண்டு கால நட்பு: மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Posted by - February 22, 2022 0
திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையின் மகன் டாக்டர் கலை கதிரவன்- சந்தியா பிரசாத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இத்திருமணத்தை…

மாலத்தீவும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம்…!

Posted by - January 12, 2024 0
பிரதமர் மோடி சமீபத்தில் நம் நாட்டின் யூனியன் பிரதேசமான அழகு ததும்பும் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு நடைப்பயிற்சி மற்றும் ஸ்கூபா டைவிங் மேற்கொண்ட பிரதமர் அதுதொடர்பான…

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.