முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் : கொண்டாட்டத்தில் தமிழகம்

47 0

திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு கால ஆதிக்கத்தை உடைத்து, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தத்தைப் படைத்து, முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சி. ஜோசப் விஜய் இன்று தமது 52-வது பிறந்தநாளை முதல்முறையாக ‘முதலமைச்சர்’ என்ற அந்தஸ்துடன் கொண்டாடவுள்ளார்.

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவின் மகனாக 1974-ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பிறந்தார் விஜய். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த விஜய் அதன் பின்னர், தனது தந்தையின்டைரக்‌ஷனில் ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமானார்.

2024-ல் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியைத் தொடங்கி, தனது 69-வது படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொன்னார் விஜய். 2026 மே மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு 2026 மே 10 அன்று தமிழகத்தின் 9-வது முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.

பதவியேற்ற சில வாரங்களிலேயே வரும் அவரது முதல் பிறந்தநாள் என்பதால், இது அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்குப் பிறகு ஒரு நடிகர் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி முதலமைச்சர் ஆக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார், கப்பு முக்கியம் பிகிலு என சொன்னது போலவே கப்பை ஜெயித்துக் காட்டியுள்ளார் விஜய்.

#HBDVijay உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றன. முதலமைச்சர் விஜயக்கு பிரதமர் மோடி, வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நிருபர் டி.வி. மற்றும் நிருபர் டைமஸ் சார்பில் முதலமைச்சருக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

– நிருபர் நாராயணன்

Related Post

ஆல் இன் ஆல் அழகுராஜா – 2

Posted by - May 6, 2025 0
ஞாயிற்றுக்கிழமை, மதியம் 1 மணி… அம்பத்தூர் பிரபல தனியார் பள்ளி வளாகம். நீட் தேர்வு எழுத மாணவர்கள் பெற்றோருடன் வாகனங்களில் பரபரப்பாக வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். முழுக்கை…

மக்கள் பாதுகாப்பில் துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்

Posted by - May 13, 2023 0
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் புகுந்த பாம்பை விரைந்து வந்து பிடித்த தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். பாரதி…

அரசியல் ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த விஜய்

Posted by - June 18, 2023 0
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே நமது நிருபர் டிவியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், 234 தொகுதிகளில் இருந்தும் முதலிடம்…

அம்பத்தூரில் யுகாதி திருநாள் கோலாகல கொண்டாட்டம்

Posted by - April 2, 2022 0
சென்னை அம்பத்தூர் ஐசிஎப் காலனியில், கம்ம நாயுடு சங்கம் சார்பில் தெலுங்கு புத்தாண்டான யுகாதி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு கம்ம நாயுடு சங்கத்தின் அயப்பாக்கம் கிளை…

உலகின் சூப்பர் பவர் நாடானது இந்தியா

Posted by - August 24, 2023 0
பூமியில் இருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதன் மூலம் உலகின் சூப்பர்…

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.