திருச்செந்தூரை சூறையாடும் நில மோசடி கும்பல்

72 0

தமிழ்நாட்டில் நில மோசடி கும்பலின் அராஜகம் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. சென்னையை அடுத்த ஆவடி, நெல்லை அருகேயுள்ள நாங்குநேரி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கொடைக்கானல் ஆகிய இடங்கள் நில மோசடிக்கு பெயர் பெற்ற பகுதிகளாக விளங்குகின்றன. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை சர்வ சாதாரணமாக போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக விற்கும் கும்பல்கள் இப்பகுதிகளில் தொடர்ந்து பிடிபட்டு வருகின்றன. அதுவும் ஆவடியில் பிரிட்டிஷ் காலத்து ஆவணங்களைக் கூட ஒரிஜினல் போன்று தயார் செய்யும் கில்லாடிகள் உலா வருகின்றனர்.

சமீபத்தில் பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி அம்பலமான நிலையில், முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரிலும் ஏராளமான மோசடி கும்பல்கள் களமிறங்கியுள்ளதாக நமது “ஊர்குருவி”க்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இங்கு கோயில் பிரசாதத்தை அந்த முருகன் பெயரிலேயே போலியாக ஆன்லைனில் விற்றது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், திருச்செந்தூர் நகரப் பகுதி முழுவதும் தற்போது தங்கும் விடுதிகளின் தேவை அதிகரித்துள்ளதை பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மற்றும் தனி நபராக வசிக்கும் உரிமையாளர்களை மிரட்டியும் சொத்துக்களை அபகரிக்கும் முறைகேடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தற்போது பத்திரப்பதிவுக்கு ஆன்லைன் பட்டா மிக முக்கிய ஆவணமாக கேட்கப்படுவதால், திருச்செந்தூர் பேரூராட்சி பெயரில் வழங்கப்பட்ட பழைய வரி ரசீதுகளில் போலியாக ஒரு பெயரை எழுதி, அதையே ஆதாரமாக கொடுத்து அடுத்தவர் பட்டாவில் பெயரை சேர்த்துவிடுகிறார்கள். பின்னர், ஆன்லைன் பட்டாவை காட்டி உரிமையாளரை மிரட்டுவதும், நீதிமன்றத்தில் ஒரு வழக்கை போட்டு அவர்களை அச்சுறுத்துவதையும் திருச்செந்தூரில் செயல்படும் மோசடி கும்பல்கள் ஒரு டெக்னிக்காக பயன்படுத்துகிறார்கள்.

ஒரு நிலத்திற்கு பல உரிமையாளர்கள் இருக்கும்போது, அதே பெயரில் உள்ள ஆதார் அட்டை கொண்டவர்களை போலியாக காண்பித்து ஏமாற்றுகின்றனர். அல்லது ஆதார் கார்டையே போலியாக தயாரிக்கின்றனர். இந்த நிலத் திருட்டு கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் சாமானிய மக்களாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் புகார் கொடுக்கக் கூட அஞ்சி நிலம் போனாலும் பரவாயில்லை என கருதி உயிருக்குப் பயந்து விலகிச் செல்லும் நிலை உள்ளது.

தமிழ்க் கடவுளைக் காண உலகெங்கும் இருந்தும் முருக பக்தர்கள் குவியும் திருச்செந்தூர் மெல்ல மெல்ல மக்கள் வாழத் தகுதியற்ற ஊராக மாறத் தொடங்கியுள்ளது. நிலத்தை இழப்பவர்கள் மனம் வெதும்பி இந்த புனித நகரத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

திருச்செந்தூர் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த பிரச்னையில் உரிய கவனம் செலுத்த வேண்டும். அதேநேரத்தில், இந்த முறைகேடுகளை தடுக்கவும், திருச்செந்தூரின் புனிதத்தை காப்பாற்றவும் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாண்புமிகு அறநிலையைத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மக்கள் மட்டுமல்ல… அந்த முருகனும் காத்திருக்கிறார்…

– நிருபர் நாராயணன்

Related Post

வில்லனாக நடித்து மக்கள் மனதில் கதாநாயகனாக உயர்ந்த ஆதி குணசேகரன்

Posted by - September 9, 2023 0
சன் டி.வி.யில் கடந்த ஓராண்டாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல இயக்குநர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது…

உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20

Posted by - March 20, 2022 0
ஓட்டு வீடுகளிலும் கூடு கட்டி நம்முடன் நெருங்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் இன்று நம்மை விட்டும் இந்த பூமியை விட்டும் வேகமாக விடைபெற்று வருகின்றன. இவை வீட்டுக்…

டிஜிட்டல் சேவையால் சட்டத்துறையிலும் முன்னேற்றேம்: பிரதமர் மோடி

Posted by - October 15, 2022 0
சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாடு குஜராத் ஏக்தா நகரில் தொடங்கியது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்ட மாநாட்டில் விரைவான நீதி வழங்குதல், ஒட்டுமொத்த சட்ட…

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர்

Posted by - March 1, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். திமுகவினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு…

கும்மிடிப்பூண்டி ரமேஷ் இல்லத் திருமண விழா

Posted by - August 30, 2025 0
பிரபல நுங்கு வியாபாரி கும்மிடிப்பூண்டி ரமேஷ் அவர்களின் மகள் துர்காவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. இதில், உறவினர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு…

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.