சென்னை உயர் நீதிமன்றத்தின் பிரபல மூத்த வழக்கறிஞர் திரு. ராஜா செந்தூர் பாண்டியன், முதலமைச்சர் திரு. விஜய்யை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் திரு. நிர்மல்குமார் முன்னிலையில் இவர் கடந்த மாதம் தவெகவில் இணைந்தார். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து அவரது பணி சிறக்க வாழ்த்து கூறினார். இந்த சந்திப்பு நேற்று நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான திருமதி. சசிகலாவின் வழக்கறிஞராக செயல்பட்டு, பல்வேறு முக்கிய வழக்குகளில் அவருக்காக வெற்றிகரமாக வாதாடியவர் திரு. ராஜா செந்தூர் பாண்டியன்.
இவர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
– நிருபர் நாராயணன்
