சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 91.18% பேருக்கு கேம்பஸ் பணி நியமன ஆணை

503 0

த்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 91.18% மாணவ- மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதிகபட்சமாக ஆண்டுக்கு 53 லட்சம் ரூபாய் ஊதியத்தில் 6 பேர் தேர்வாகியுள்ளனர்.

சத்யபாமா சிறப்பு வேலை வாய்ப்பு 2023 முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டமாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் டாக்டர் மரிய ஜான்சன், துணை தலைவர்கள் அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி, மரிய கேத்ரின் ஜெயப்ரியா ஆகியோர் விழாவிற்கு தலைமையேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி கௌரவித்தனர்.

வேலைவாய்ப்புக்கு பதிவு செய்த மாணவர்கள் 91.18% விழுக்காடு மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன் வேலை பணி அமர்த்தப்பட உள்ளனர். இதுவரை மொத்தமாக 2823 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

சத்யபாமாவின் நிகர்நிலை பல்கலைகழகம் HCL, Capgemini, TCS, Mindtree, PWC ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

2023-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகைபுரிந்து தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், தளவாடங்கள், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணி நியமனங்களை வழங்கியுள்ளது.

இந்த வேலை வாய்ப்பில் தேர்வானவர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு 53 லட்சம் ரூபாய் ஊதியத்தில் 6 பேர் தேர்வாகியுள்ளனர், அதேபோல் ஆண்டுக்கு 27 லட்சம் ஊதியத்தில் 14 பேர் மற்றும் ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானமாக 120 பேரும், குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூபாய் 5.2 லட்சமாக தேர்வாகியுள்ளார்.

– நிருபர் நாராயணன்

Related Post

தேர்தலை புறக்கணிக்க திருச்செந்தூர் மக்கள் முடிவு

Posted by - April 9, 2024 0
திருச்செந்தூர் வாழ் உள்ளூர் மக்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காலம் காலமாக சென்று வந்த தரிசனத்தில் விரைவு தரிசனத்தில் கட்டணமில்லாமல் தரிசனம் செய்வதற்கும், திருச்செந்தூர் மக்களிடம் எவ்வித…

10 கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - February 11, 2022 0
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையில் உள்ள…

விஜய் ஆண்டனியின் 25வது படம் “சக்தி திருமகன்”

Posted by - February 1, 2025 0
விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாக இருக்கிறது ‘ சக்தி திருமகன் ‘ திரைப்படம். அவரது கேரியரில் இந்தப் படம் நிச்சயம் மைல் கல்லாக…

டிஜிட்டல் சேவையால் சட்டத்துறையிலும் முன்னேற்றேம்: பிரதமர் மோடி

Posted by - October 15, 2022 0
சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாடு குஜராத் ஏக்தா நகரில் தொடங்கியது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்ட மாநாட்டில் விரைவான நீதி வழங்குதல், ஒட்டுமொத்த சட்ட…

‘கூகுள்’ மீது இந்திய பத்திரிகை நிறுவனங்கள் அதிரடி புகார்

Posted by - March 26, 2022 0
காசு தராமல் ஓசியில் செய்தி கூகுள் நிறுவனம் காசு தராமல் ஓசியில் செய்திகளை பயன்படுத்தி வருவதாக இந்திய பத்திரிகை நிறுவனங்களின் அமைப்பான ஐஎன்எஸ் எனப்படும் Indian Newspaper…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.