விஜய் ஆண்டனியின் 25வது படம் “சக்தி திருமகன்”

446 0

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாக இருக்கிறது ‘ சக்தி திருமகன் ‘ திரைப்படம். அவரது கேரியரில் இந்தப் படம் நிச்சயம் மைல் கல்லாக அமைய உள்ளது. அவரது 25வது திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படம் மாஸ் ஆக்‌ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்று படக்குழு உறுதியளித்துள்ளனர்.

எதார்த்தமாகவும், வலிமையாகவும் கதை சொல்லும் திறமை கொண்ட இயக்குநர் அருண் பிரபு இப்படத்தை இயக்கவிருக்கிறார். இவரின் முந்தைய படங்களான ‘அருவி‘, ‘வாழ்‘ உள்ளிட்ட படங்கள் இப்போதும் தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைகளாகக் கொண்டாப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் இப்படமும் ஆழமான கதையுடன் கூடிய ஆக்‌ஷன் மாஸ் படமாக இடம் பெறும்.

படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.

விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நடிகர் மாஸ்டர் கேசவ் ஆகிய திறமையான நடிகர்கள் குழு உடன் நடிக்கவிருக்கிறார்கள்.

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் :

எழுத்தாளர்-இயக்குனர்: அருண் பிரபு
ஒளிப்பதிவு: ஷெல்லி காலிஸ்ட்
இசை: விஜய் ஆண்டனி
எடிட்டிங்: ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா
ஆக்ஷன் நடனம்: ராஜசேகர்

குடும்பம், ஆக்‌ஷன், மாஸ் மற்றும் உணர்வுகள் சூழந்த கதையாக நிச்சயம் ‘சக்தி திருமகன்‘ பார்வையாளர்களுக்கு நல்லதொரு திரை அனுபவத்தைக் கொடுக்கும். தற்சமயம் படம் போஸ்ட் புரடெக்‌ஷனில் உள்ளது. படம் குறித்து கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

விஜய் ஆண்டனியின் 25வது திரைப்படமாக அவருடைய கேரியரிலும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமையும்.

Related Post

ஜிகிரி தோஸ்த் – சினிமா விமர்சனம்

Posted by - December 25, 2023 0
காதல், காமெடி, த்ரில்லர் ஆகிய மூன்று கலவையான அம்சங்களுடன் மூன்று நண்பர்களை சுற்றி நகர்கிறது ஜிகிரி தோஸ்த் திரைப்படத்தின் கதை. பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன், இப்படத்தின்…

குமார சம்பவம் – சினிமா விமர்சனம்

Posted by - September 19, 2025 0
கோலிவுட்டில் இயக்குநராக வாய்ப்பு தேடும் குமரன் தாத்தா தாய், தங்கையுடன் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். ஆனால், தயாரிப்பாளர் கிடைக்காததால் வீட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தில்…

“டக்கர்” – திரை விமர்சனம்

Posted by - June 10, 2023 0
நடிகர் சித்தார்த், திவ்யான்ஷா நடிப்பில் வெளிவந்துள்ள படம் “டக்கர்”. பணக்காரராக ஆசைப்படும் மிடில் கிளாஸ் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த் வருகிறார். பல வேலைகளை விட்டு விட்டு…

அரசியல் ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த விஜய்

Posted by - June 18, 2023 0
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே நமது நிருபர் டிவியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், 234 தொகுதிகளில் இருந்தும் முதலிடம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

17 − 12 =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.