பயாஸ்கோப் – சினிமா விமர்சனம்

481 0

ட்டப்படிப்பு முடித்த இளைஞர் சங்ககிரி ராஜ்குமார் சினிமா கனவுகளுடன் வேறு வேலைக்குச் செல்லாமல் கிராமத்தில் உலா வருகிறார். ஜோதிடத்தால் அவரது உறவினர் தற்கொலை செய்துகொள்ள, ஜோதிடர்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திரைப்படம் ஒன்றை சொந்தமாக தயாரிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவருக்கு உள்ளூர் ஜோதிடர் பல தடைகளை உருவாக்குகிறார். அதைத் தாண்டி ராஜ்குமார் வெற்றி பெற்றாரா என்பது தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

இயக்குநர் ராஜ்குமாரே படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இயல்பான நடிப்பால் கதையோடு ஒன்றிப்போய்விட்டார் சங்ககிரி ராஜ்குமார். மற்றவர்களுக்கு அவர் நடிப்பு சொல்லிக்கொடுக்கும் காட்சியில் அவர் படும் சிரமங்கள் ரசிகர்களுக்கு நல்ல நகைச்சுவை விருந்து.

கிராமத்து நிஜக் கூலித்தொழிலாளர்களை வைத்து படத்தை உருவாக்கியுள்ள இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சேரன், சத்யராஜ் ஆகியோர் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குப்புசாமி, வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, எஸ்.எம்.மாணிக்கம், இந்திராணி, எஸ்.எம்.செந்தில்குமார், சிவா ரத்தினம், பெரியசாமி, மோகனப்பிரியா, தங்கராசு, தர்மசெல்வன், நமச்சிவாயம், ராஜேஷ் கிருஷ்ணன், ரஞ்சித், நிலா ஆகியோர் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

படம் முழுக்க கிராமத்து மண் வாசனை கமழ்கிறது. ஒளிப்பதிவாளர் முரளி கணேஷின் கேமரா அந்த கிராமத்தில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வைத் தருகின்றது. தாஜ்நூரின் பின்னணி இசை அதற்கு பக்கபலமாக உள்ளது.

ஒரு சினிமாவை தயாரித்து வெளியிடுவது என்பது நெருப்புக் கயிற்றில் நடப்பது போன்றது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

பயோஸ்கோப் ரசிகர்களுக்கு சினிமாவை புரியவைக்கும் ஒரு அற்புதமான படைப்பு. இதுபோன்ற படங்களை நாம் கொண்டாட வேண்டும். தாராளமாக தியேட்டருக்கு சென்று ரசித்துப் பார்க்கலாம்.

– நிருபர் நாராயணன்

Related Post

“பவுடர்” – திரைப்பட விமர்சனம்

Posted by - November 30, 2022 0
உலகமே நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர். அந்தவகையில், பவுடர் போட்டு தங்கள சுயரூபத்தை மறைத்து வெளியில் நடிக்கும் சில மனிதர்களின் உண்மை முகத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது “பவுடர்”…

‘ஷூ’ திரைப்பட இசை வெளியீட்டு விழா

Posted by - September 4, 2022 0
Netco Studios சார்பில் நியாஷ் & கார்த்திக் மற்றும் ATM Productions  மதுராஜ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி…

பிரசாந்த் படத்தின் பாடலை வெளியிட்டார் விஜய்

Posted by - July 27, 2024 0
பிரசாந்த் நடித்திருக்கும் “அந்தகன்” திரைப்படத்தின் அறிமுகப் பாடலை நடிகர் விஜய் வெளியிட்டார். இதுதொடர்பான வீடியோ படத்தின் அறிமுக விழாவில் ஒளிபரப்பப்பட்டது. இவ்விழாவில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகைகள் ஊர்வசி,…

“இங்க நான் தான் கிங்கு” – சினிமா விமர்சனம்

Posted by - May 19, 2024 0
‘கோபுரம் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் அன்புசெழியன் மற்றும் சுஸ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ள படம் “இங்க நான் தான் கிங்கு”. நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு…

“கட்ஸ்” இசை வெளியீட்டு விழா

Posted by - April 9, 2025 0
புதுமுக நடிகராக அறிமுகமாகும் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி இருப்பதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ள படம் கட்ஸ். சின்னத்திரை நடிகை ஸ்ருதி நாரயணன் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக வெள்ளித்திரையில் கால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.