“பவுடர்” – திரைப்பட விமர்சனம்

1180 0

லகமே நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர். அந்தவகையில், பவுடர் போட்டு தங்கள சுயரூபத்தை மறைத்து வெளியில் நடிக்கும் சில மனிதர்களின் உண்மை முகத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது “பவுடர்” திரைப்படம்.

ஒரு இரவில் நடக்கும் திரில் நிறைந்த சம்பவங்களே “பவுடர்” படத்தின் மையக்கரு.

தமிழ் திரையுலகின் முன்னணி சினிமா செய்தித் தொடர்பாளரான நிகில் முருகன் முதல்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். ராகவன் என்னும் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார். காக்கிச்சட்டை அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. கம்பீரக் குரலும் அவருக்கு பெரிய பிளஸ். முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பதை போல விளாசியிருக்கிறார் நிகில் என்றே கூறலாம். அதற்கேற்றார் போல், படமும் டி-20 கிரிக்கெட் போட்டிக்கு நிகரான வேகத்தில் நகர்கிறது.

கதாநாயகி வித்யா பிரதீப் அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோல், வையாபுரி, சாந்தினி உள்ளிட்டோரும் தங்கள் பங்களிப்பை எந்த குறையுமின்றி வழங்கியுள்ளனர்.

முழு படமும் ஒரு இரவிலேயே நடப்பதால், ராஜா பாண்டியின் கேமரா கோணங்களில் நாமும் அப்படியே கேமராவுடன் பயணிப்பது போன்ற உணர்வு தொற்றிக்கொள்கிறது.

படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம், “இசையமைப்பாளர் யார்?” என ரசிகர்களை கேட்க வைத்திருக்கிறார் லியாண்டர் லீ மார்ட்டி. “சாயம் போன வெண்ணிலவே…”, “நோ சூடு நோ சொரணை” ஆகிய பாடல்கள் அருமை.

படத்தில் 6 சம்பவங்களை, திரைக்கதை என்னும் ஒரே கயிற்றில் ஒன்றாக கட்டி இழுத்து, ஒரு பெரும் த்ரில்லர் படத்தை நிலை நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் விஜய்ஸ்ரீ.

மொத்தத்தில் ரசிகர்களின் முகத்தில் மட்டுமல்ல நெஞ்சிலும் திகில் பூசும் படம் தான் “பவுடர்”. தாராளமாக தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.

– நிருபர் நாராயணன்

Related Post

சொர்க்கவாசல் – சினிமா விமர்சனம்

Posted by - November 29, 2024 0
ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ், திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் சொர்க்கவாசல். ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட படமாக வெளிவந்துள்ளது. 1999-ல்…

வருணன் – சினிமா விமர்சனம்

Posted by - March 15, 2025 0
ஜெயவேல் முருகன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரில்லா இணைந்து நடித்துள்ள படம் ‘வருணன்’. ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும்…

பீஸ்ட் – திரைப்பட விமர்சனம்

Posted by - April 14, 2022 0
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ள படம் பீஸ்ட். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் இருந்து படம் தொடங்குகிறது. படத்தின் டைட்டிலை போட்டு படத்தை ஆரம்பிக்கும் இடத்திலேயே இயக்குநர் நெல்சன்…

“மிஸஸ் அண்ட் மிஸ்டர்” இசை வெளியீட்டு விழா

Posted by - May 26, 2025 0
“மிஸஸ் அண்ட் மிஸ்டர்” திரைப்படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். வனிதா விஜயகுமார் இயக்கியுள்ளார். படத்திலும் அவர் நடித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர்…

மங்கை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

Posted by - February 9, 2024 0
ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.