IPL “இந்தியன் பீனல் லா” திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
IPL படத்தில் கிஷோர், பைக் ரேசர் TTF வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ‘ஆடுகளம்’ நரேன், போஸ் வெங்கட், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி.ஆர். மதன்குமார் தயாரித்திருக்கிறார். எஸ்.. பிச்சு மணி ஒளிப்பதிவை கவனிக்க, அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைத்திருக்கிறார்.
வரும் 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
