சான்றிதழ் – சினிமா விமர்சனம்

831 0

ருவறை என்ற கிராமம் பெயருக்கு ஏற்றார் போல் புனிதமான கிராமமாக திகழ்கிறது. இந்த கிராமத்து மக்கள் ஒற்றுமை, ஒழுக்கம் என நீதி பிறழாமல் வாழ்கின்றனர்.

இதனை கெளரவிக்கும் வகையில், மத்திய அரசு சிறந்த கிராமத்திற்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கிறது. ஆனால், கிராமத்திற்கு வெளியே சென்று அதனை வாங்க அவ்வூர் மக்கள் மறுத்துவிட, கோபத்தில் அந்த கிராமத்திற்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் ஒரு அரசியல்வாதி.

இதில் யார் வென்றார்கள் என்பதும், அந்த கிராமத்தின் புகழுக்கு பின்னால் உள்ள வெள்ளைச்சாமி என்பவரின் தியாகத்தையும் அழகாக எடுத்துரைப்பது தான் சான்றிதழ் படத்தின் கதை.

அரபு நாடுகள் பாணியில் உள்ள கருவறை கிராமத்தின் கட்டுப்பாடுகள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தால் ஊரும் நாடும் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் எழும் வகையில் அற்புதமான கதையம்சம் உள்ள படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் ஜெயச்சந்திரன்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஹிட் பாடல்களை கொண்ட “தூத்துக்குடி” படத்தில் நடித்த ஹரி, தற்போது கருவறையில் வெள்ளைச்சாமியாக வந்து நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

நிருபராக வரும் ஆஷிகா அசோகன் – ரோஷன் பஷீர் காதல் காட்சிகள் அழகானவை.

அமைச்சர் கன்ட்ரோல் கந்தசாமி வேடத்தில் அசத்தியிருக்கிறார் ராதாரவி. நடிகை கெளசல்யா, மனோபாலா உள்ளிட்டோரின் பங்களிப்பும் கனகச்சிதம். சிரிப்பு காட்சிகளுக்கும் பஞ்சம் இல்லை.

கருவறை கிராமத்தின் அடையாளங்களையும் பாடல் காட்சிகளையும் தனது கேமராவுக்குள் அற்புதமாக பதிவு செய்து வெள்ளித்திரையில் பிரம்மிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிமாறன் சிவன். இதுபோல், கிராமத்து காட்சிகளில் ஆர்ட் டைரக்டர் நாஞ்சில் ராபர்ட்டின் உழைப்பு தெரிகிறது.

இசையமைப்பாளர் பிஜு ஜேக்கப் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் குறை சொல்ல முடியாத வகையில் உள்ளது. படத்திற்கும் வலு சேர்க்கிறது.

நல்ல கருத்துக்களை விதைத்திருக்கும் இப்படம் நிச்சயம் ரசிகர்களின் நற்சான்றிதழுக்கு உரியது.

– நிருபர் நாராயணன்

Related Post

நூடுல்ஸ் – சினிமா விமர்சனம்

Posted by - September 10, 2023 0
காதல் மனைவி மற்றும் மகளுடன் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார் ஹீரோ ஹரிஷ் உத்தமன். அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் அனைவரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒன்றாக இணைந்து வீட்டின்…

டீன்ஸ் – சினிமா விமர்சனம்

Posted by - July 17, 2024 0
பள்ளி மாணவர்கள் 12 பேர் ஒன்றுசேர்ந்து பேய் இருப்பதாக கூறப்படும் ஒரு ஊருக்கு, ஆர்வம் மேலிட கும்பலாக புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு செல்லும் வழியில் மேலும் ஒரு…

“பவுடர்” – திரைப்பட விமர்சனம்

Posted by - November 30, 2022 0
உலகமே நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர். அந்தவகையில், பவுடர் போட்டு தங்கள சுயரூபத்தை மறைத்து வெளியில் நடிக்கும் சில மனிதர்களின் உண்மை முகத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது “பவுடர்”…

‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

Posted by - June 16, 2026 0
எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில்…

சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ படத்தின் இசை வெளியீடு

Posted by - February 10, 2026 0
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆழி ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.