ரத்னம் – சினிமா விமர்சனம்

509 0

ம்எல்ஏ மற்றும் தாதாவாக உள்ள சமுத்திரக்கனிக்காக ஒரு கொலையை செய்துவிட்டு சிறுவயதில் சிறைக்கு செல்லும் விஷால் தண்டனை முடிந்து வெளியே வருகிறார். அதன் பின்பு, சமுத்திரக்கனிக்கு அடியாளாக இருக்கிறார்.

நீட் தேர்வு எழுத வரும் பிரியா பவானி சங்கரிடம் மனதை பறிகொடுக்கும் ஹீரோ, அவரை கொல்ல வரும் ரவுடிகளிடம் இருந்தும் நாயகியை காப்பாற்றுகிறார். கதாநாயகியை கொல்ல வருபவர்களின் பின்னணி என்ன? அவர்களிடம் இருந்து ஹீரோயினை விஷால் எப்படி காப்பாற்றுகிறார்? அவரது முயற்சி வெற்றி பெற்றதா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

படம் முழுக்க வெட்டுக் குத்து என களேபரம் பண்ணுகிறார் விஷால். காதல் காட்சிகளில் ரொமான்ஸ் காட்டுவதிலும், குடும்பத்தை காக்க அரிவாள்மனை ஏந்துவது என நடிப்பிலும் மெருகேறியிருக்கிறார் முன்னாள் செய்தி வாசிப்பாளரான பிரியா பவானி சங்கர்.

விஜயகுமார், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன் என அனைவரும் கச்சிதமான நடிப்பை தந்திருக்கிறார்கள். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், விடிவி. கணேஷ் ஆகியோரின் காமெடி காட்சிகளும் பக்காவாக செதுக்கியிருக்கிறார்கள்.

இசையில் வழக்கம் போல் மாஸ் காட்டியிருக்கிறார் நம்ம டிஎஸ்பி.

சண்டைக் காட்சிகள் மலைக்க வைப்பதாக உள்ளது. விஷாலின் உழைப்பு புரிகிறது. ஆனால், காட்சிக்கு காட்சி வன்முறை வருவதை சற்றே குறைத்திருக்கலாம்.

சாமி, சிங்கம் திரைப்படங்களின் வரிசையில் ரத்னம் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அந்த வகையில் ஏமாற்றத்தை தந்திருக்கிறார் டைரக்டர் ஹரி.

– நிருபர் நாராயணன்

 

Related Post

அழகான பொண்ணும் குண்டு பையனும்…!

Posted by - September 8, 2022 0
பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமி – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் திருப்பதியில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்…

நீளிரா – சினிமா விமர்சனம்

Posted by - April 3, 2026 0
தமிழ் ஈழத்தில் 1980-களில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் நீளிரா. இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள்,…

“சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்” இசை வெளியீட்டு விழா

Posted by - July 20, 2025 0
நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும்…

பரம்பொருள் – திரைப்பட விமர்சனம்

Posted by - September 2, 2023 0
அரவிந்த் ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் “பரம்பொருள்”. நீண்ட காலமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் சிலை கடத்தலை மையமாக கொண்டு…

‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

Posted by - October 31, 2025 0
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.