லேப் டெக்னீசியன் இல்லாததால் காவலர்கள் தவிப்பு

648 0

வடியில், தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள காவல் மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக லேப் டெக்னீசியன் இல்லாததால் மெடிக்கல் லேப் பூட்டிய நிலையில் உள்ளது.

ஏற்கனவே பணியிலிருந்த திருவள்ளுரை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் பணிமூப்பு அடிப்படையில் ஓய்வு பெற்று சென்றுவிட்ட பிறகு வேறு யாரும் புதிதாக பணி அமர்த்தப்படவில்லை. அதனால் காவலர்கள் முதற்கொண்டு அதிகாரிகள் வரை அவசர மருத்துவ உதவிக்கு தனியார் மருத்துவ ஆய்வகங்களை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த மருத்துவமனை ஆய்வகத்தில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை கருவிகள் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருப்பதால் அவை அனைக்கும் வீணாகும் நிலை உருவாகியுள்ளது.

தற்போது இரண்டு அரசு மருத்துவர்கள் பணியில் உள்ளனர். ஆனால் போதிய பணியாளர்கள் பணி அமர்த்தப்படவில்லை.

இரவிலும் மருத்துவ சேவை கிடைப்பதால் சிறு சிறு உடல் உபாதைகளுக்குக் கூட மருத்துவ உதவியை நாடலாம். ஆனால், காலி இடத்தை நிரப்பும் பொருட்டு லேப் டெக்னீசியன் ஒருவரை உடனடியாக ஆவடி காவல் மருத்துவமனையில் நியமனம் செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Post

தேசம் காக்கும் “எல்லைச்சாமிகள்”

Posted by - January 9, 2022 0
சீனாவின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடுங்குளிர்,…

கும்மிடிப்பூண்டி ரமேஷ் இல்லத் திருமண விழா

Posted by - August 30, 2025 0
பிரபல நுங்கு வியாபாரி கும்மிடிப்பூண்டி ரமேஷ் அவர்களின் மகள் துர்காவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. இதில், உறவினர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு…

முதலமைச்சருடன் பிரபல வழக்கறிஞர் சந்திப்பு

Posted by - August 15, 2026 0
சென்னை உயர் நீதிமன்றத்தின் பிரபல மூத்த வழக்கறிஞர் திரு. ராஜா செந்தூர் பாண்டியன், முதலமைச்சர் திரு. விஜய்யை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக…

தமிழ்நாட்டில் புதிய கட்சி உதயம்

Posted by - June 18, 2026 0
“தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”யை (TNCJP) பிராந்திய அரசியல் அமைப்பாக பதிவு செய்யக் கோரி சென்னையை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் பிரம்ம பாலசுப்பிரமணியம் தேர்தல் ஆணையத்தை…

சின்னத்திரை தொகுப்பாளர் நடிகை ரம்யாவின் புத்தகம் வெளியீடு

Posted by - January 21, 2023 0
பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா சுப்பிரமணியன் எழுதிய ‘Stop Weighting’ புத்தகத்தை சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி 2023-ல் நடிகர் கார்த்தி மற்றும் சுஹாசினி மணிரத்னம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.