‘லவ் ஓ லவ்’ – சினிமா விமர்சனம்

25 0

விஷ், நாக துர்கா நடிப்பில் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்துள்ளது லவ் ஓ லவ் திரைப்படம்.

காதலியின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில், தன் வருமானத்தை விட அதிகமாகச் செலவழிக்கும் ஹீரோ, ஒருகட்டத்தில் கடன், கிரெடிட் கார்டு பிரச்னை போன்ற நெருக்கடிகளில் சிக்கிக் கொள்கிறார். இதனால் அவரது காதலிலும் சிக்கல்கள் எழுகின்றன. அவற்றில் இருந்து அவர் மீண்டு வந்தாரா, அவர்களது காதல் கைகூடியதா என்பதே படத்தின் மீதிக்கதை.

இப்படத்தின் முதல் பாதி முழுக்க காதல், நகைச்சுவை, இளமைத் துள்ளல் என விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், சிக்கல்களும் யதார்த்தமாக விவரிக்கப்படுகிறது. எனினும், திரைக்கதை சுவாரஸ்யம் குறையாமல் கையாளப்பட்டுள்ளது.

கதாநாயகன் பவிஷ் அப்பாவித்தனத்தையும் காதல், நெருக்கடி போன்ற பல்வேறு உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். நாகா துர்காவும் அருமையாக நடித்துள்ளார். இருவருக்கும் இடையே காதல் காட்சிகளில் தென்படும் கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது.

இயக்குனர்கள் கே.எஸ். ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

முத்தையாவின் ஒளிப்பதிவு ஃபாக்ஸ்னின் பின்னணி இசையும் கூட்டணி அமைத்து படத்தின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது.

‘லவ் ஓ லவ்’ மூலம் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடனும் ஒரு படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன்.

– நிருபர் நாராயணன்

Related Post

தமிழ்க்குடிமகன் டிரெய்லர் வெளியீட்டு விழா

Posted by - August 18, 2023 0
தமிழ்க்குடிமகன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இசக்கி கார்வண்ணன் இயக்கும் இப்படத்தில் இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் வெளியீட்டு விழாவில்…

டிடி நெக்ஸ்ட் லெவல் – சினிமா விமர்சனம்

Posted by - May 19, 2025 0
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கஸ்தூரி, யாஷிகா, கெளதம் மேனன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் 2-ம்…

“பானி பூரி” – திரை விமர்சனம்

Posted by - June 20, 2023 0
ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், RJ, சின்னத்திரை தொகுப்பாளர், நடிகர் என பன்முகத்திறன் கொண்ட பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் வெப்…

‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Posted by - July 1, 2025 0
BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும்…

“அந்தகன்” படத்தின் சிறப்பு டிரெய்லர் வெளியீடு

Posted by - August 8, 2024 0
நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள அந்தகன் திரைப்படத்தின் சிறப்பு டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் இயக்குநர் தியாகராஜன், சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா…

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.