தமிழ்க்குடிமகன் டிரெய்லர் வெளியீட்டு விழா

645 0

மிழ்க்குடிமகன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இசக்கி கார்வண்ணன் இயக்கும் இப்படத்தில் இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார், இயக்குநர்கள் தங்கர்பச்சான், பொன்வண்ணன், மாரி செல்வராஜ், அமீர் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், குலத்தொழில் முறையை உடைத்தெறியும் படமாக இது இருக்கும். சமத்துவத்தை வலியுறுத்தும் தமிழ்க்குடிமகன் படத்தை 100 நாள் ஓடச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

தங்கர்பச்சான் பேசுகையில், தமிழ்க்குடிமகன் போன்ற தரமான படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவளித்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.

நடிகர் சேரன் பேசுகையில், இப்படத்தை ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும். கிராமங்களில் இன்னும் மிச்சமிருக்கும் சாதி வெறியை ஒழிக்க வேண்டும். இதில் சாதி ஒழிப்பு குறித்து வலியுறுத்தியுள்ளோம் என குறிப்பிட்டார்.

இப்படம் தமிழ் திரையுலகில் பெரியளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– நிருபர் நாராயணன்

Related Post

சூது கவ்வும் 2 – சினிமா விமர்சனம்

Posted by - December 17, 2024 0
தமிழ் திரையுலகில் சூது கவ்வும் படம் மிகப்பெரிய வெற்றியுடன் ஒரு ட்ரெண்ட் செட்டர் படமாக அமைந்தது. இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு அதன் 2-ம் பாகம் தற்போது…

நூடுல்ஸ் – சினிமா விமர்சனம்

Posted by - September 10, 2023 0
காதல் மனைவி மற்றும் மகளுடன் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார் ஹீரோ ஹரிஷ் உத்தமன். அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் அனைவரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒன்றாக இணைந்து வீட்டின்…

சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் ‘கார்மேனி செல்வம்’

Posted by - March 28, 2026 0
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம்…

‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Posted by - July 1, 2025 0
BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும்…

‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ இசை வெளியீட்டு விழா

Posted by - September 14, 2024 0
விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.