கார்மேனி செல்வம் – சினிமா விமர்சனம்

28 0

முத்திரக்கனி, லக்ஷ்மி பிரியா, கெளதம் மேனன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் கார்மேனி செல்வம்.

கார்மேனி செல்வமாக வரும் சமுத்திரக்கனி கெளதம் மேனனிடம் கார் டிரைவராக பணிபுரிகிறார். கெளதம் வெளிநாடு சென்ற நிலையில், அவரது காரை கால் டாக்சியாக ஓட்டி பணம் சம்பாதிக்கும் சமுத்திரக்கனி ஆடம்பரமாக செலவு செய்கிறார். கடன் பிரச்சனையில் சிக்கி அவமானங்களை சந்திக்க நேரிடுகிறது.

சூழ்நிலையால் ஷார்ஜாவுக்கு வேயலைக்காக செல்லும் சமுத்திரக்கனி தனது கடனை அடைத்தாரா, அவர் காரை டாக்சியாக ஓட்டியது முதலாளிக்கு தெரிந்ததா என்பதே படத்தின் பரபரப்பான கதை.

சமுத்திரக்கனியும் கதாநாயகி லஷ்மி பிரியாவும் மிக கச்சிதமான தேர்வு. இருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். கனமான கேரக்டர் என்றாலும் லஷ்மி பிரியா அருமையாக நடித்திருக்கிறார்.

கெளதம் மேனனின் பங்களிப்பு பிரமாதம். பிற கதாபாத்திரங்களும் கதையோடு யதார்த்தமாக பொருந்தியிருக்கிறார்கள்.

ஸ்கூல் பீஸ், பணம் இல்லாததால் சொந்த பந்தங்களால் அவமானத்தை சந்திப்பது போன்ற நடுத்தர குடும்பத்து சிக்கல்களை மிக யதார்த்தமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

படத்தில் வரும் பல காட்சிகள் நம் வாழ்விலும் நாம் சந்தித்த அனுபவங்களாகவே இருப்பது படத்திற்கு பிளஸ் என்றே கூறலாம். இயக்குநர் ஸ்ரீராம் சக்ரியின் பங்களிப்பு ஒவ்வொரு பிரேமிலும் மிளிர்கிறது.

ராகவ் ரமேஷ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

இரு மாபெரும் இயக்குநர்களின் நடிப்பு கூட்டணியில் கார்மேனி செல்வம், சூப்பர்மேனி செல்வமாக ஜொலிக்கிறார்.

– நிருபர் நாராயணன்

Related Post

அயலான் – சினிமா விமர்சனம்

Posted by - January 14, 2024 0
விவசாயம் மற்றும் உயிரினங்கள் மீது அக்கறை கொண்ட சிவகார்த்திகேயன் வேலை தேடி சென்னை வருகிறார். யோகிபாபு, கருணாகரன் நண்பர்களாக கிடைக்க சென்னையிலேயே செட்டில் ஆகிறார். இந்நிலையில், ஒரு…

பிரதர் – சினிமா விமர்சனம்

Posted by - November 4, 2024 0
சட்டப் படிப்பை முடிக்காமல் எதற்கெடுத்தாலும் “லா பாயின்ட்” பேசி பிரச்னைகளை உருவாக்கும் ஜெயம் ரவியை, ஊட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் சகோதரி பூமிகா. ஆனால்,…

அந்தகன் – சினிமா விமர்சனம்

Posted by - August 11, 2024 0
டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் “அந்தகன்” மாறுபட்ட படைப்பாக வெளிவந்துள்ளது. பார்வையில்லாத பியானோ இசைக் கலைஞராக வருகிறார் பிரசாந்த். அவருக்கும் பிரியா ஆனந்துக்கும் இடையே காதல் மலர்கிறது.…

சான்றிதழ் – சினிமா விமர்சனம்

Posted by - August 6, 2023 0
கருவறை என்ற கிராமம் பெயருக்கு ஏற்றார் போல் புனிதமான கிராமமாக திகழ்கிறது. இந்த கிராமத்து மக்கள் ஒற்றுமை, ஒழுக்கம் என நீதி பிறழாமல் வாழ்கின்றனர். இதனை கெளரவிக்கும்…

மிஸஸ் & மிஸ்டர் – சினிமா விமர்சனம்

Posted by - July 13, 2025 0
‘மிஸஸ் & மிஸ்டர்’ படத்தை வனிதா விஜயகுமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவரது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். அம்மா, மகள் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த…

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.