பிரதர் – சினிமா விமர்சனம்

408 0

ட்டப் படிப்பை முடிக்காமல் எதற்கெடுத்தாலும் “லா பாயின்ட்” பேசி பிரச்னைகளை உருவாக்கும் ஜெயம் ரவியை, ஊட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் சகோதரி பூமிகா. ஆனால், அவரது குடும்பமும் நமது கதாநாயகனால் பிரிந்து விடுகிறது. கடைசியில் தன்னைப் பற்றிய உண்மை தெரியவர, பிரிந்த குடும்பத்தை மீண்டும் ஒன்றுசேர்க்க முயற்சி செய்கிறார் பவர் கார்த்தியாக வரும் ஜெயம் ரவி. இதில் அவர் வென்றாரா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கார்த்தி கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். “லா” பாயின்டுகளை அள்ளிவிட்டு அலப்பறை பண்ணுகிறார். சட்டக்கல்லூரி மாணவருக்கு கல்லூரி பேராசிரியரே தேர்வு எழுதுவதை செல்போனில் படம் பிடித்து மீடியாவுக்கு அனுப்புவேன் என மிரட்டும் காட்சி செம கலாட்டா. உருக்கமான நடிப்பிலும் கிளாப்ஸ் அள்ளுகிறார் ஜெயம் ரவி.

இப்படத்தில் பிரியங்கா மோகன் இருக்கிறாரா என தேடும் அளவுக்கு தான் அவருக்கு காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், காதல், காமெடி, சென்டிமெண்ட் என்று அசத்தலாக நடித்துள்ளார்.

அக்கா கதாபாத்திரத்தில் அழகாக பொருந்துகிறார் பூமிகா. விடிவி கணேஷின் நகைச்சுவை நம் வயிற்றை பதம் பார்க்கிறது. சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘மக்காமிஷி’ பாடல் ரசிக்க வைக்கிறது. விவேகானந்த் சந்தோஷம் ஊட்டியின் அழகை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.

பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் பேசினால், குடும்ப அமைப்புக்குள் எத்தகைய சிக்கல்கள் எழும் என்பதை இயல்பாகக் காட்சிப்படுத்த முயன்றுள்ளார் இயக்குநர் எம்.ராஜேஷ். மிகச்சிறந்த குடும்பக் கதையை தேர்வு செய்து மிகவும் சுவாரஸ்யமாக படைத்திருக்கிறார்.

மொத்தத்தில் பிரதர் இனிமையானவன்.

– நிருபர் நாராயணன்

Related Post

‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

Posted by - February 22, 2024 0
ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.…

செம்பி – திரை விமர்சனம்

Posted by - December 29, 2022 0
அற்புதமான காட்சியமைப்பும் கதாபாத்திரங்களின் நேர்த்தியான பங்களிப்பும் செம்பியை வெற்றிப்பட வரிசையில் இணைத்திருக்கிறது. மைனா, கும்கி, கயல் ஆகிய மண்சார்ந்த வெற்றிப்படங்களை தந்த பிரபு சாலமனின் மாஸ்டர்பீஸ் என…

அமைச்சர் உதயநிதிக்கு வேல்ஸ் வேந்தர் ஐசரி கணேஷ் வாழ்த்து

Posted by - January 5, 2023 0
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் அதன் தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான…

படையாண்ட மாவீரா – சினிமா விமர்சனம்

Posted by - September 19, 2025 0
தமிழ்நாட்டின் வட பகுதியில் மண்ணின் மக்களுக்காக போராடிய ஒரு அரசியல் தலைவரின் சுயசரிதையை, வெள்ளித்திரைக்கு ஏற்ப வணிக ரீதியான அம்சங்களுடன் படைத்திருக்கிறார் வ.கௌதமன். தமிழின உணர்வாளரான வ.…

‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

Posted by - October 31, 2025 0
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.