‘மிஸஸ் & மிஸ்டர்’ படத்தை வனிதா விஜயகுமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவரது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார்.
அம்மா, மகள் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில், வனிதா விஜயகுமார் ஹீரோயினாக மீண்டும் களமிறங்கி இருக்கிறார். ஹீரோவாக நடித்திருக்கிறார் ராபர்ட் மாஸ்டர்
தாய்லாந்தில் வனிதா – ராபர்ட் மாஸ்டர் தம்பதி சொந்தமாக ஹோட்டல் வைத்து நடத்தி வருகின்றனர். வனிதா விஜயகுமாருக்கு 40 வயது ஆகும்போது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால் அதற்கு கணவர் மறுப்பதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு, முரண்பாடு ஏற்படுகிறது. இறுதியில், 40 வயதில் குழந்தை பெறும் திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் கதை.
வனிதாவும் ராபர்ட்டும் காதல், மோதல் என அனைத்து உணர்வுகளையும் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளனர். அடல்ட் காமெடிகள் ரசிக்கும் வைக்கும்படி இருப்பது உள்ளன. வனிதா தனது வயதுக்கேற்ற கதாபாத்திரத்தை ஏற்று அதற்குத் தக்க நடித்திருக்கிறார்.
வனிதாவின் அம்மாவாக ஷகிலா, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஸ்ரீமன், ஆர்த்தி கணேஷ் உள்ளிட்டோர் கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளனர். படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர்.
கலகலப்பாகவும் நேர்த்தியாகவும் திரைக்கதை நகர்கிறது. ஒரு இயக்குநராகவும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் வனிதா. Congrats Mam…!
துள்ளலான பாடல்களைக் கொடுத்து ரசிக்க வைக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா. பின்னணி இசையும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ராஜபாண்டி.டி, விஷ்ணு ராமகிருஷ்ணன், டிஜி கபில் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. இந்தியாவிலும் தாய்லாந்திலும் அழகாக படமாக்கியுள்ளனர்.
மொத்தத்தில், ‘மிஸஸ் & மிஸ்டர்’ பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட படமாக வெளிவந்துள்ளது. வனிதாவின் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ட்ரீட் என்றே கூறலாம்.
– நிருபர் நாராயணன்
