ஒண்டிமுனியும் நல்லபாடனும் – சினிமா விமர்சனம்

161 0

கொங்கு வட்டாரப் பின்னணியில் உருவாகியுள்ளது “ஒண்டிமுனியும் நல்லபாடனும்” திரைப்படம்.

திருமலை புரொடக்ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சுகவனம் இயக்கியுள்ளார்.

“பரோட்டா” முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கவுசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒண்டிமுனி என்ற சிறுதெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்களின் நம்பிக்கையை யதார்த்தமான கதைக்களத்தில் இணைத்துள்ளனர். நிலத்தில் நன்கு உழைக்கும் பாட்டாளியை நல்லபாடன் என்று அழைப்பது கொங்கு வட்டார வழக்கம். அந்தவகையில், கடவுளையும் மனிதனையும் பிணைத்து அதையே படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.

கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க கிடாய் ஒன்றை பலிகொடுப்பதாக வேண்டுதல் வைக்கிறார் விவசாயி நல்லபாடன். அதற்காக கிடாய் ஒன்றை வாங்கி வளர்த்து வருகிறார். ஆனால், அதனை கடவுளுக்கு பலி கொடுப்பதில் அவருக்கு பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.

ஒண்டிமுனிக்கு கிடாய் பலி கொடுக்கப்பட்டதா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

நல்லபாடனாக ‘பரோட்டா’ முருகேசன் அருமையாக நடித்துள்ளார். காடுமேடுகளில் வைக்கோல் சுமந்தபடி காலில் செருப்பு இல்லாமல் விவசாயி நல்லபாடனாகவே வாழ்ந்து காட்டியுள்ளார். இவருக்கு விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது.

புதிய இயக்குநர், புதிய நடிகர்கள் என்றாலும் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். நல்லபாடனின் மகனாக வரும் விஜயன், மகளாக நடித்துள்ள சித்ரா நடராஜன், மருமகன் விஜய் சேனாதிபதி என அனைவருமே கதாபாத்திரங்களுக்கு ஏற்ப கச்சிதமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜெ.டி.விமலின் கேமரா நகர்வுகளுக்கு ஏற்ப, “மூடர்கூடம்” நடராஜன் சங்கரன் கச்சிதமாக இசை அமைத்துள்ளார்.

சிறிய பட்ஜெட் படம் என்றாலும், யதார்த்தமான காட்சிகள், இயல்பான நடிப்பு, அமைதியான இசை, வேகமான கதை நகர்வு என பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்க முடியாத அற்புதம்.

இந்த திரைப்படம், நாமும் அந்த கிராமத்தில் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது. அதுவே இப்படத்தின் இமாலய வெற்றி.

தியேட்டரில் குடும்பத்துடன் கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படமாக வெளியாகியுள்ளது “ஒண்டிமுனியும் நல்லபாடனும்”.

மக்கள் வாழ்வியலை பேசும் இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் இன்னும் அதிகம் வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் இப்படம் உருவாக்கியுள்ளது.

– நிருபர் நாராயணன்

Related Post

சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ படத்தின் இசை வெளியீடு

Posted by - February 10, 2026 0
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆழி ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.…

ரஜினி, விஜய் பாணியில் நானும் செல்கிறேன்: அமீர்

Posted by - November 10, 2023 0
திரைப்பட இயக்குநர்கள் அமீர் மற்றும் வெற்றிமாறனின் வெற்றி கூட்டணியில் அமீர் கதாநாயகனாக நடிக்கும் படம் மாயவலை. அமீர் தயாரிக்கும் படத்தை வெற்றிமாறன் வெளியிடுகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு…

டென் ஹவர்ஸ் – சினிமா விமர்சனம்

Posted by - April 20, 2025 0
இரவு நேர ஆம்னி பேருந்தில் ஒரு பெண்ணுக்கு ஆபத்து என்ற தொலைபேசியும், மகளை காணவில்லை என்ற புகாரும் குறித்து விசாரிக்க களமிறங்குகிறார் கட்டுமஸ்தான கதாநாயகன் சிபிராஜ். சேலம்…

லீடர் படத்தின் டீசர் வெளியீடு

Posted by - March 9, 2026 0
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது.…

“பரமசிவன் பாத்திமா” படத்தின் இசை வெளியீட்டு விழா

Posted by - May 28, 2025 0
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில், இசக்கி கார்வண்ணன் தயாரித்து இயக்கி இருக்கும் “பரமசிவன் பாத்திமா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி தலைவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.