Indian Penal Law என்பதன் சுருக்கமே ஐபிஎல் திரைப்படத்தின் தலைப்பு.
குணசேகரனாக கிஷோர், அன்புவாக பைக் ரேசர் TTF வாசன், வசந்தியாக அபிராமி, கனிமொழியாக குஷிதா கல்லாப்பு ஆகியோர் நடித்துள்ளனர்.
காதலியின் சகோதரரான கிஷோரை பொய் வழக்கில் இருந்து இந்திய தண்டனைச் சட்டத்தின் மூலம் ஹீரோ வாசன் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
முதல் படம் என்றாலும் டிடிஎஃப் வாசன் காதல் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகி குஷிதா பெயருக்கு ஏற்ப ரசிகர்களை குஷிப்படுத்தும் குல்பி ஐஸ் போல் இருக்கிறார்.
கிஷோர் வழக்கம்போல் தனது யதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார்.
இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி, ஒளிப்பதிவாளர் பிச்சுமணி கூட்டணி படத்தின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளனர். பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக உள்ளன.
தினேஷ் சுப்பராயன் குழுவினரின் ஸ்டண்ட் காட்சிகள் அருமை.
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் கருணாநிதி. சந்தர்ப்ப சூழ்நிலையால் நிரபராதிகள் எப்படியெல்லாம் தண்டனைக்கு ஆளாகிறார்கள் என்பதை அழகாக படம்பிடித்து காட்டியிருக்கிறார்கள்.
டிடிஎஃப் வாசனின் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தான்.
– நிருபர் நாராயணன்
