“மார்கழி திங்கள்” – சினிமா விமர்சனம்

749 0

னோஜ் பாரதிராஜா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்துள்ள கவித்துவமான திரைப்படம் “மார்கழி திங்கள்”.

“என் இனிய தமிழ் மக்களே, என்னைப் போலவே எனது மகனையும் இயக்குநராக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்ற கம்பீரக் குரலில் பாரதிராஜாவின் டிரேட்மார்க் அறிமுக வரிகளுடன் படம் தொடங்குகிறது.

கதை, திரைக்கதை, வசனத்துடன் படத்தையும் தயாரித்துள்ளார் சுசீந்திரன். இயக்குநர் பொறுப்பை மனோஜ் பாரதிராஜாவிடம் கொடுத்திருக்கிறார். அவரது நம்பிக்கையை வீணாக்காமல் முதல் படத்திலேயே இயக்குநராக சிக்ஸர் அடித்திருக்கிறார் ராஜா வீட்டு கன்றுக்குட்டி…!

திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில், பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் கவிதாவுக்கும், வினோத்துக்கும் காதல் மலர்கிறது. ஆனால், கல்லூரி படிப்பு முடித்த பின்பு தான் கல்யாணம், அதுவரை காதலர்கள் பேசக்கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார் கவிதாவின் தாத்தா பாரதிராஜா.

இத்தகைய சூழலில் காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும், அவற்றை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதும் தான் படத்தின் மீதிக்கதை.

இன்றைய காலத்தில் சாதியின் பெருமையை காட்டும் ஒரு ஃபேஷனாக மாறிவிட்ட ஆணவப் படுகொலைகளை சுட்டிக்காட்டி படத்தை தந்திருக்கிறார்கள். சுமார் 2 மணி நேரப் படத்தில் எதிர்பாராத திருப்பங்களும் உள்ளன.

கதாநாயகன் ஷ்யாம் செல்வன், தனக்கு முதல் படம் என்றாலும் குறை சொல்ல முடியாத நடிப்பை தந்திருக்கிறார். கதாநாயகி ரக்சனா காதல் காட்சிகளில் செம மாஸ்.

இயக்குநர் பாரதிராஜாவும் தாத்தா வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

“மார்கழி திங்கள்” என்னும் அழகான டைட்டில் கொண்ட இப்படத்தை இளையராஜா தனது இசை தூரிகையால் காதல் காவியமாக்கி இருக்கிறார். பின்னணி இசையிலும் தனித்தன்மையை காட்டியிருக்கிறார்.

கிராமிய மணம் வீசும் இதுபோன்ற திரைப்படங்கள் இன்னும் நிறைய வரவேண்டும். அதற்கு மனோஜ் பாரதிராஜா தனது தந்தை பாணியில் புதிய களம் அமைத்திருக்கிறார் என்றே கூறலாம்.

மொத்தத்தில்… மார்கழி குளிர் நெருங்கும் வேளையில், காதல் குளிரில் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது “மார்கழி திங்கள்”.

– நிருபர் நாராயணன்

Related Post

லீடர் – சினிமா விமர்சனம்

Posted by - April 3, 2026 0
தூத்துக்குடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக கப்பலில் ஒரு கன்டெய்னர் வருகிறது. அதை அம்பலப்படுத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்கிறார் பெண் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா. கார் மெக்கானிக்காக…

சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் ‘கார்மேனி செல்வம்’

Posted by - March 28, 2026 0
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம்…

காதல், நகைச்சுவை கலந்த ‘ஹார்ட்டின்’

Posted by - February 16, 2025 0
டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை (Rom-Com) திரைப்படம் ‘ஹார்ட்டின்’ துடிப்புமிக்க இளம் திறமைகளை…

புரோக்கன் ஸ்கிரிப்ட் – சினிமா விமர்சனம்

Posted by - August 19, 2023 0
ஸ்டிரீட் லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஜோ ஜியோவானி சிங் இயக்கியுள்ளார். சிங்கப்பூரில் ஒரு டிராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார் கதாநாயகி. அவரது நிறுவனத்தின் இலவச விமான…

குமார சம்பவம் – சினிமா விமர்சனம்

Posted by - September 19, 2025 0
கோலிவுட்டில் இயக்குநராக வாய்ப்பு தேடும் குமரன் தாத்தா தாய், தங்கையுடன் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். ஆனால், தயாரிப்பாளர் கிடைக்காததால் வீட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.