டிஎஸ்பியின் “ஓ பெண்ணே” வீடியோ பாடல் வெளியீடு

1127 0

சையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்தின் “ஓ பெண்ணே” என்ற வீடியோ ஆல்பப் பாடலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். “ஓ பெண்ணே” பாடல் பான்-இந்தியன் பாப் என்ற சிறப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் 10 மொழிகளில் ஏராளமான படங்களில் பணியாற்றிய போதிலும் இசையமைப்பாளர் டிஎஸ்பி இதற்காக தனது நேரத்தை ஒதுக்கி இந்த அழகான பாடலை வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி இவ்விழாவில் டிஎஸ்பி பேசுகையில், “சுதந்திரமான இசைக் கலைஞர்களை ஸ்பாட்லைட்களின் கீழ் வரவழைக்க வேண்டும் என்ற லட்சிய முனைப்புடன் ராக்ஸ்டார் நிகழ்வை தொகுத்து வழங்கினேன். இந்தப் பாடலின் முக்கிய நோக்கம் அனைத்து மொழிகளிலும் உள்ள சுதந்திரமான இசைக் கலைஞர்களின் திறமைகளையும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதாகும். எதிர்காலத்தில், அவர்கள் பல மொழிகளில் இசையை உருவாக்க முடியும். சமீபத்தில் ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது” என்றார்.

மேலும், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், “கமல் சார் ஒரு இசை மேதை. எனது அனைத்து முயற்சிகளிலும் அவர் ஒரு சிறந்த தூணாகவும் ஆதரவாகவும் இருந்துள்ளார். ஆரம்பத்தில் கமல் சாரிடம் ஒரு சர்வதேசப் பாடல் யோசனையை தனிப்பட்ட உரையாடலில் தெரிவித்தேன். எங்கள் இருவரையும் இணைக்கும் முக்கியக் காரணியாக இருந்தது அவரது இசை ஆர்வம்தான். அதனால்தான் இந்தப் பாடலை கமல் சார் வெளியிட வேண்டும் என்று நான் விரும்பினேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இசையமைப்பாளர் டிஎஸ்பியின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன், இதுபோன்ற பாடல்கள் பலருக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என குறிப்பிட்டார்.

Related Post

லீடர் – சினிமா விமர்சனம்

Posted by - April 3, 2026 0
தூத்துக்குடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக கப்பலில் ஒரு கன்டெய்னர் வருகிறது. அதை அம்பலப்படுத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்கிறார் பெண் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா. கார் மெக்கானிக்காக…

டிஎஸ்பி – திரைப்பட விமர்சனம்

Posted by - December 4, 2022 0
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் டிஎஸ்பி. ஊரில் நண்பர்கள் வட்டத்துடன் ஜாலியாக உலா வரும் விஜய் சேதுபதிக்கும் தாதா பாஸ்கருக்கும் மோதல்…

கிறிஸ்டினா கதிர்வேலன் – சினிமா விமர்சனம்

Posted by - November 10, 2025 0
அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிங்கம் புலி, கஞ்சா கருப்பு,…

ஸ்ரீகாந்த் தேவா இசையில் முதல்முறையாக முருகன் பாடல்

Posted by - January 27, 2024 0
யோகிபாபு மற்றும் நட்டி வெளியிட்ட பக்தி பரவசமூட்டும் ‘முருகனே செல்ல குமரனே’ பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது சமீபத்தில் தேசிய விருது பெற்று…

லேப் டெக்னீசியன் இல்லாததால் காவலர்கள் தவிப்பு

Posted by - May 1, 2024 0
ஆவடியில், தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள காவல் மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக லேப் டெக்னீசியன் இல்லாததால் மெடிக்கல் லேப் பூட்டிய நிலையில் உள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.