மாதம் 40,000 ரூபாய் EMI கட்டுகிறேன்: சின்னத்திரை நடிகை திவ்யா

1047 0

பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தனது கணவர் அர்னவ் அடித்து துன்புறுத்துவதாக சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார், சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு போட்டியாக நடிகர் அர்னவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் தனது மனைவி மீது புகார் அளித்துள்ளார்.

கர்ப்பிணியாக உள்ள தன்னை கணவர் வயிற்றில் எட்டி உதைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார் நடிகை திவ்யா. மேலும், கொரோனா காலத்தில் 2 ஆண்டுகளாக கணவர் வேலையில்லாமல் இருந்ததாகவும், இதனால் வீட்டுக்கடனுக்கு மாதம் 40,000 ரூபாய் தானே செலுத்தி வந்ததாகவும், அர்னவ் கைச்செலவுக்கு கூட பணம் கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார் திவ்யா.

அர்னவ் பெயரில் வீடு வாங்கியுள்ளதாகவும் 25 ஆண்டு கால வீட்டுக் கடனில், இன்னும் 23 ஆண்டுகள் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாகவும், நடிகை திவ்யா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், பல பெண்களுடன் அர்னவ் நெருங்கி பழகி அவர்களிடம் மோசடி செய்வதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டையும் திவ்யா முன்வைத்துள்ளார்.

ஆனால், சக நடிகரான ஈஸ்வர் என்பவரின் தூண்டுதலின் பேரில் தனது மனைவி இவ்வாறு புகார் அளித்திருப்பதாக கூறியுள்ளார் நடிகர் அர்னவ்.

Related Post

நூறு சாமி – சினிமா விமர்சனம்

Posted by - June 23, 2026 0
ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது நூறு சாமி. கணவனை இழந்த சுவாசிகா, தனது மகன்களான அஜய் திஷன் மற்றும் சக்தி இருவரையும் தனியொரு பெண்ணாக…

டிஜிட்டல் சேவையால் சட்டத்துறையிலும் முன்னேற்றேம்: பிரதமர் மோடி

Posted by - October 15, 2022 0
சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாடு குஜராத் ஏக்தா நகரில் தொடங்கியது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்ட மாநாட்டில் விரைவான நீதி வழங்குதல், ஒட்டுமொத்த சட்ட…

டெஸ்ட் – சினிமா விமர்சனம்

Posted by - April 5, 2025 0
ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சஷிகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தண்ணீரில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் தனது திட்டத்தை வெற்றி…

லாந்தர் – சினிமா விமர்சனம்

Posted by - June 23, 2024 0
கோவையில் ஒருநாள் இரவு… கருப்பு ரெயின்கோட் அணிந்த மர்ம மனிதர், சாலையில் காண்பவர்களை எல்லாம் கொடூரமாகத் தாக்குகிறார். அவரைப் பிடிக்கச் சென்ற போலீஸ்காரர்களும் தாக்கப்படுகிறார்கள். இதையடுத்து, காவல்துறை…

முதலமைச்சருடன் பிரபல வழக்கறிஞர் சந்திப்பு

Posted by - May 28, 2026 0
மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய்யை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. பிரம்ம பாலசுப்ரமணியம் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது முதலமைச்சருக்கு அவர் பூங்கொத்து கொடுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.