ஜின் – தி பெட் : சினிமா விமர்சனம்

233 0

லேசியப் பின்னணியில் நகரும் கதையில், முகேன் ராவ் ஹீரோவாக நடித்துள்ள படம் “ஜின் – தி பெட்”.

டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், பவ்யா தரிகா, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, ராதாரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, வினோதினி வைத்தியநாதன், நந்து ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நாயகன் முகேன் ராவ் தனது அற்புதமான நடிப்பால், அவர் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்படி செய்திருக்கிறார். ஹீரோயின் பவ்யா பவ்யமாக வந்து செல்கிறார். நடிப்பில் இன்னும் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

ராதாரவி தனது அனுபவத்தை கச்சிதமாக நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். வினோதினி மற்றும் வடிவுக்கரசி சிறிய கதாபாத்திரங்களில் தோன்றியிருந்தாலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். காமெடி காட்சிகளில் பால சரவணன் தனித்து நிற்கிறார்.

அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவும் விவேக்- மெர்வின் இசையும் போட்டி போட்டு படத்தை தாங்கிப் பிடிக்கின்றன. “கொஞ்சம் பக்கம் வா…” பாடல் அருமையாக உள்ளது. படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மிரட்டல்.

காமெடி ஹாரர் என்டர்டெய்னராக வெளியாகியுள்ள இப்படத்தை இயக்குனர் டி.ஆர்.பாலா செம விறுவிறுப்பாக கொண்டுச் செல்கிறார். தனித்துவமான கதை மற்றும் கற்பனையான காட்சிகள், இந்த திரைப்படம் முழுவதும் சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்குவதில் வெற்றி பெறுகிறது. அந்தவகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையிலான ஃபேமிலி எண்டர்டெய்னருக்கான அம்சங்கள் படத்தில் உள்ளன.

அக்னி வெயில் முடிந்து தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. அந்த குளுமையை அனுபவித்தபடி, இரண்டரை மணி நேரத்தை ஜாலியாக செலவிட விரும்புபவர்கள் தாராளமாக தியேட்டருக்குச் சென்று ரசித்துப் பார்க்கலாம்.

– நிருபர் நாராயணன்

Related Post

‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

Posted by - June 16, 2026 0
எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில்…

பயாஸ்கோப் – சினிமா விமர்சனம்

Posted by - January 5, 2025 0
பட்டப்படிப்பு முடித்த இளைஞர் சங்ககிரி ராஜ்குமார் சினிமா கனவுகளுடன் வேறு வேலைக்குச் செல்லாமல் கிராமத்தில் உலா வருகிறார். ஜோதிடத்தால் அவரது உறவினர் தற்கொலை செய்துகொள்ள, ஜோதிடர்களைப் பற்றி…

‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Posted by - July 1, 2025 0
BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும்…

“கடன் கேட்டேன், வாய்ப்பு தந்தார் தயாரிப்பாளர்” – நடிகர் சந்தானம் நெகிழ்ச்சி

Posted by - May 8, 2024 0
‘கோபுரம் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் அன்புசெழியன் மற்றும் சுஸ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ள படம் “இங்க நான் தான் கிங்கு”. நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில்…

“டக்கர்” – திரை விமர்சனம்

Posted by - June 10, 2023 0
நடிகர் சித்தார்த், திவ்யான்ஷா நடிப்பில் வெளிவந்துள்ள படம் “டக்கர்”. பணக்காரராக ஆசைப்படும் மிடில் கிளாஸ் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த் வருகிறார். பல வேலைகளை விட்டு விட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.