“டக்கர்” – திரை விமர்சனம்

877 0

டிகர் சித்தார்த், திவ்யான்ஷா நடிப்பில் வெளிவந்துள்ள படம் “டக்கர்”.

பணக்காரராக ஆசைப்படும் மிடில் கிளாஸ் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த் வருகிறார். பல வேலைகளை விட்டு விட்டு கடைசியில் ஒரு ரவுடியிடம் கார் டிரைவராக வேலை செய்கிறார் சித்தார்த்.

இதனிடையே ஒரு பணக்காரப் பெண் கடத்தல் கும்பலில் இருந்து தப்பி எதிர்பாராத விதமாக சித்தார்த்தை சந்திக்கிறார். அவர்களிடையே காதல் மலர்கிறது.

கடத்தல் கும்பலிடம் இருந்து கதாநாயகியை நமது ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.

சாக்லேட் பாயாக இளைஞிகளின் மனம் கவர்ந்த சித்தார்த்தை, ஆக்சன் ஹீரோவாக பார்ப்பது வித்தியாசமாக உள்ளது. மேலும், சித்தார்த்தின் நடிப்பில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்க வேண்டும். கார் சேஸிங் காட்சிகள் ஹாலிவுட்டை மிஞ்சுவதாக உள்ளது.

திவ்யன்ஷாவின் நடிப்பும், கிளாமரான கதாபாத்திரமும் அற்புதமாக படத்தை நகர்த்தி செல்கிறது.

யோகி பாபுவின் நகைச்சுவை படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். பின்னணி இசை படத்தின் வேகத்தை கூட்டியிருக்கிறது. பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகமாக அமைந்துள்ளது.

கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கத்தில் காதல், காமெடி, ஆக்சன் கலந்த கலவையாக வெளிவந்துள்ள “டக்கர்” செம டக்கர் என்றே கூறலாம்.

– நிருபர் நாராயணன்

Related Post

குமார சம்பவம் – சினிமா விமர்சனம்

Posted by - September 19, 2025 0
கோலிவுட்டில் இயக்குநராக வாய்ப்பு தேடும் குமரன் தாத்தா தாய், தங்கையுடன் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். ஆனால், தயாரிப்பாளர் கிடைக்காததால் வீட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தில்…

பேட்டில் – சினிமா விமர்சனம்

Posted by - April 25, 2026 0
எலீட் டாக்கீஸ் சார்பில் கே. பாஸ்கரன் தயாரித்துள்ள பேட்டில் திரைப்படத்தில் அர்ஜூன் பிரபாகரன் அறிமுக நடிகராக களமிறக்கப்பட்டுள்ளார். ராப் இசைக் கலைஞராக வரும் அர்ஜூன், பள்ளி ஆசிரியை…

‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ இசை வெளியீட்டு விழா

Posted by - September 14, 2024 0
விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில்…

பம்பர் – திரை விமர்சனம்

Posted by - July 5, 2023 0
நடிகர் வெற்றி, பிக்பாஸ் புகழ் நடிகை ஷிவானி ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “பம்பர்”. ஜாலி பேர்வழியான கதாநாயகன் சபரிமலை செல்லும் நிலையில், 10 கோடி பம்பர்…

ஏப்ரல் 3-ம் தேதி “நீளிரா” திரைப்படம் வெளியீடு

Posted by - March 23, 2026 0
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.