“பரமசிவன் பாத்திமா” படத்தின் இசை வெளியீட்டு விழா

290 0

ட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில், இசக்கி கார்வண்ணன் தயாரித்து இயக்கி இருக்கும் “பரமசிவன் பாத்திமா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இசையை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தீபன் சக்கரவர்த்தி இசை அமைத்துள்ளார். ஏகாதசி பாடல்களை எழுதியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், மொழிப்பற்றும் இனப்பற்றும் என்னையும் இயக்குநர் இசக்கி கார்வண்ணனையும் இணைக்கிறது. “பரமசிவன் பாத்திமா” திரைப்படம் சிறப்பாக உருவாகியுள்ளது. படக்குழுவினருக்கு அன்பான வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசுகையில், என்னை சுற்றி வாழ்ந்த மக்களின் நிஜக்கதையை படமாக கொண்டு வந்துள்ளேன். இது மனிதநேயத்தைப் பேசும் படம். விமல் ஒரு மிகச்சிறந்த உழைப்பாளி என்றார்.

நடிகர் விமல் பேசுகையில், இயக்குநர் இசக்கி கார்வண்ணன், இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, ஒளிப்பதிவாளர் சுகுமார், சாயா தேவி உட்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இப்படம் வெற்றியடைய உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை என்றார்.

இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி பேசுகையில், இப்படத்தில் உள்ள 5 பாடல்களும் வெவ்வேறு வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இயக்குநர் இசக்கி கார்வண்ணன் மிகவும் வேலை வாங்குவதில் மிகவும் திறமையானவர். படத்தில் வாய்ப்பு அளித்த இயக்குநருக்கு நன்றி என்றார்.

பாடலாசிரியர் ஏகாதசி பேசுகையில், இந்த திரைப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள். அவை அனைத்தையும் நான் எழுதியுள்ளேன். இதில் பணியாற்றியது மகிழ்ச்சிகரமான அனுபவம். படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள் என்றார்.

நடிகை சேஷ்விதா ராஜு பேசுகையில், சிறந்த படைப்பாளிகளை கொண்ட தமிழ் சினிமாவில் எனது பயணம் “பரமசிவன் பாத்திமா” மூலம் தொடங்குகிறது. அனைவரும் படத்திற்கு ஆதரவு தர வேண்டும். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் இசக்கி கார்வண்ணனுக்கு மிக்க நன்றி. என்றார்.

வரும் ஜூன் 6-ம் தேதி அன்று உலகெங்கும் “பரமசிவன் பாத்திமா” வெளியாகிறது.

– நிருபர் நாராயணன்

Related Post

`லவ் டுடே’ – திரை விமர்சனம்

Posted by - November 5, 2022 0
காதலும் செல்போனும் இரண்டறக் கலந்துவிட்ட இன்றைய காதலின் யதார்த்த சிக்கல்களை அழகுற ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறது லவ் டுடே. 2k கிட்ஸ்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம். கோலிவுட்டில்…

கட்டாளன் – சினிமா விமர்சனம்

Posted by - June 2, 2026 0
மலையாள திரையுலகம் சமீப காலமாக Pan India படமாக உருவாகத் தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் Raw Gangster படமாக வெளிவந்துள்ளது கட்டாளன். சட்டவிரோத யானைத் தந்த கடத்தலை…

சிவகார்த்திகேயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted by - November 13, 2021 0
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவருக்கு கோலிவுட்டில் தனியிடம் பெற்றுத்தர, அடுத்து சீமராஜா திரைப்படம் இவருக்கு ரசிகர்களிடையே நட்சத்திர…

“குயிலி” இசை வெளியீட்டு விழா

Posted by - June 4, 2025 0
BM பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் “குயிலி”. நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாஷ்மிகா,…

‘படையாண்ட மாவீரா’ படக் குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு

Posted by - September 10, 2025 0
இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.