“மிஸஸ் அண்ட் மிஸ்டர்” இசை வெளியீட்டு விழா

245 0

“மிஸஸ் அண்ட் மிஸ்டர்” திரைப்படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். வனிதா விஜயகுமார் இயக்கியுள்ளார். படத்திலும் அவர் நடித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில், ராபர்ட் மாஸ்டர், ஸ்ரீமன், ஷகிலா, செஃப் தாமு, பவர் ஸ்டார் சீனிவாசன், பாத்திமா பாபு, கிரண், ஆர்த்தி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விழாவில் நடிகை வனிதா பேசியதாவது:

நான் அமெரிக்காவில் இருந்தபோது ஜோவிகா பிறந்தாள். அந்த குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று நினைத்தவர் என் அப்பா. எனவே, எனது மகளுக்கும் என் தந்தையின் பெயரை இணைத்து சூட்டினேன்.

எனது மகள் ஜோவிகா தயாரித்த படத்தை நான் இயக்கி நடித்து இருக்கிறேன். கரீனா கபூர், அபிஷேகபச்சனின் வாரிசுகளை திரையுலகில் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதைப் போல, ஜோவிகாவையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தை தியேட்டரில் பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். எனது மகளின் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் வசந்த பாலன் பேசியதாவது:

வனிதா நடிக்க வந்த காலத்தில் இருந்தே நான் அவரைப் பார்த்து வருகிறேன். அவரது போராட்டங்கள் மிகவும் பெரியது.  தைரியமும் திமிரும் தன்னை பாதுகாத்துக் கொள்ள அவர் உருவாக்கிய ஆயுதம் என்று நினைக்கிறேன். எல்லா பெண்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்று கருதுகிறேன்.

இந்த ஆணாதிக்க சமூகத்தில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் டைட்டில் மிகவும் அருமையாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள் என்றார்.

– நிருபர் நாராயணன்

Related Post

டிஎஸ்பி – திரைப்பட விமர்சனம்

Posted by - December 4, 2022 0
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் டிஎஸ்பி. ஊரில் நண்பர்கள் வட்டத்துடன் ஜாலியாக உலா வரும் விஜய் சேதுபதிக்கும் தாதா பாஸ்கருக்கும் மோதல்…

“பபூன்” – திரை விமர்சனம்

Posted by - September 24, 2022 0
ஒரு நாடகக் நடிகனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களையும் திருப்பங்களையும் அழகுற பதிவு செய்திருக்கிறது “பபூன்”. கால ஓட்டத்தில் கரைந்து வரும் நாடகத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால்,…

ட்ராமா – சினிமா விமர்சனம்

Posted by - March 23, 2025 0
அறிமுக இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ள திரைப்படம் ட்ராமா (Trauma). விவேக் பிரசன்னா, சாந்தினி தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அதற்காக மருத்துவத்துறையின் உதவியை…

டென் ஹவர்ஸ் – சினிமா விமர்சனம்

Posted by - April 20, 2025 0
இரவு நேர ஆம்னி பேருந்தில் ஒரு பெண்ணுக்கு ஆபத்து என்ற தொலைபேசியும், மகளை காணவில்லை என்ற புகாரும் குறித்து விசாரிக்க களமிறங்குகிறார் கட்டுமஸ்தான கதாநாயகன் சிபிராஜ். சேலம்…

“சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்” இசை வெளியீட்டு விழா

Posted by - July 20, 2025 0
நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.