பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படம்

1189 0

பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் கணேசமூர்த்தி இணைந்துள்ள இதன் படப்பிடிப்பு சுதந்திர தினத்தில் தொடங்கியது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட இந்தபடத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

தமிழகத்தின் நகரங்கள், ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டு மீதான உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும் , நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும்படியான கதையமைப்பில் இப்படம் உருவாகி வருகிறது.

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

O2 , தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இப்படத்தின் செய்தித் தொடர்பு பணிகளை குணா சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.

 

 

Related Post

ஷு – திரைப்பட விமர்சனம்

Posted by - October 17, 2022 0
நிட்கோ ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்தி மற்றும் நியாஸ் இணைந்து ஷூ படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் யோகி பாபு, திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய்…

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீடு

Posted by - March 31, 2026 0
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின்…

டிடி நெக்ஸ்ட் லெவல் – சினிமா விமர்சனம்

Posted by - May 19, 2025 0
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கஸ்தூரி, யாஷிகா, கெளதம் மேனன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் 2-ம்…

சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் ‘கார்மேனி செல்வம்’

Posted by - March 28, 2026 0
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம்…

அக்யூஸ்ட் – சினிமா விமர்சனம்

Posted by - July 31, 2025 0
நடிகர்கள் உதயா, அஜ்மல், யோகி பாபு நடிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “அக்யூஸ்ட்”. கணக்கு என்னும் குற்றவாளியைக் கொல்ல ஒரு கூலிப்படையும், மறுபுறம் அவரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.